Rashmika Mandanna: கன்னட சினிமாவில் தன் சினிமா கனவு பயணத்தைத் தொடங்கி, டோலிவுட்டில் கோலோச்சி இன்று இந்தி சினிமாவுக்கு சென்று கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகை ராஷ்மிகா. நேஷனல் க்ரஷ் என அனைத்து தரப்பு ஆடியன்ஸாலும் கொண்டாடப்படும் ராஷ்மிகாவுக்கு இணையத்தில் ஹேட்டர்ஸ் அதிகம் என்றாலும், அவர்களுக்கெல்லாம் பதிலடி தந்தபடி இணையத்தில் ஆக்டிவாக வலம் வருகிறார்.


ராஷ்மிகாவின் குட்டித் தங்கை ஷிமான்




படங்களில் ஒருபுறம் பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் ராஷ்மிகா, தன் சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது தனது குட்டித் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகாவுக்கு அவரைவிட 16 வயது இளையவரான ஷிமான் மந்தனா எனும் தங்கை உள்ளார். ஷிமான் இன்று தன் 11ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், “இன்று என்னுடைய குட்டி தங்கைக்கு பிறந்தநாள். பிறந்த நாள் வாழ்த்துகள் என் லிட்டில் பேபி. ஐ லவ் யூ. உன்னை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என எமோஷனலாகப் பதிவிட்டுள்ளார். 


தங்கையிடம் பிரிந்திருப்பது வேதனை




ராஷ்மிகாவை விட ஷிமான் 16 வயது இளையவர் ஆவார். தன் தங்கை பற்றி ஏற்கெனவே சில நேர்க்காணல்களில் மனம் திறந்து ராஷ்மிகா பேசியுள்ளார். "நான் ஒரு ஹாஸ்டலில் தான் வளர்ந்தேன், அதனால் என் பெற்றோரிடமிருந்து விலகி இருப்பது எனக்கு பிரச்னையாக இல்லை. ஆனால் தொடர்ந்து என் தங்கை பிறந்த பிறகு நான் நீண்ட காலம் வெளியே தங்கி இருப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. அவள் பிறந்த பிறகு, நான் தான் அவளுக்கு உணவளிப்பேன், அவளுக்கு டயாப்பர்களை மாற்றுவேன், நான் அவளை குளிப்பாட்டுவேன், நான் அவளுடைய இரண்டாவது அம்மா.


அதிலிருந்து தொடங்கி, இப்போது அவள் வளர்வதைப் பார்க்க முடியாமல் நகர்வது கொஞ்சம் வேதனையாக உள்ளது” என முன்னதாக தனியார் நேர்காணல் ஒன்றில் வேதனையுடன் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தனுஷ் உடன் தமிழ் படம்


ராஷ்மிகா இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடித்திராத நிலையில், தற்போது நடிகர் தனுஷ் உடன் குபேரா படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைக்க உள்ளார். மறுபுறம் தெலுங்கில் அவர் நடித்துள்ள புஷ்பா 2 தி ரூல் படம்  விரைவில் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து ரெயின்போ, தி கேர்ள்பிரண்ட், ஆகிய தெலுங்கு படங்களிலும், சாவா எனும் இந்தி படத்திலும் நடிக்க உள்ளார்.


மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 12: "நேரில் நின்று பேசும் தெய்வம்" தாயைப் போற்றி வணங்கும் மகனின் பாசம்!


நிகழ்ச்சிக்கு வராத பிரபு தேவா! திடீரென மயங்கி விழுந்த குழந்தைகள் - அதிர்ச்சியில் பெற்றோர்! நடந்தது என்ன?