இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். 

Continues below advertisement

தீனா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் என ஏகப்பட்ட படங்களை தமிழில் இயக்கியுள்ளார். அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப் பின் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார். இதற்கிடையில் தமிழில் சூர்யாவை வைத்து எடுத்த கஜினி படத்தை இந்தியில் ஆமீர்கானை வைத்து ரீமேக் செய்தா ஏ.ஆர்.முருகதாஸ். 

இப்படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் துப்பாக்கி, மௌன குரு, தெலுங்கில் எடுத்த ஸ்டாலின் ஆகிய படங்களை எல்லாம் இந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அத்தனைப் படங்களும் பாலிவுட்டில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. இதனால் இந்தியில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறினார். 

Continues below advertisement

இதனிடையே தமிழில் சிவகார்த்திகேயன் படம் இயக்க பணிகளை தொடங்கிய நிலையில் முருகதாஸூக்கு சல்மான்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். சல்மான் கானும், இந்த தயாரிப்பாளரும் 10 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளனர். இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் கடந்த சில மாதங்களாக ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படத்தின் ஷூட்டிங்கானது தொடங்கவுள்ளது. கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்துக்கு “சிக்கந்தர்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிக்கந்தர் படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் 2025 ஆம் ஆண்டு ரமலான் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.