நாளை காலை 9.30 மணியளவில் 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுகளை  http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம். 


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், 26 மார்ச் தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது.


அதனை தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நாளை காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகல் வெளியிடப்பட உள்ளது.


நாளை காலை 9.30 மணிமுதல் http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் வீட்டிலிருந்தப்படியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு பொதுத்  தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.