மிருணாள் தாக்கூர்


துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை மிருணாள் தாக்கூர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பிரபலமாக அறியப்படுபவர். லஸ்ட் ஸ்டோரீஸ் முதலிய கதைகளில் நடித்த மிருணாள் தாக்கூர் கதைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதீதமான க்ளாமர் காட்சிகளிலும் நடித்து வருகிறார்.  மேலும் தொடர்ச்சியாக பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.


 பிரபல பாடகருடன் கிசுகிசு






சமீப காலங்களில் பாலிவுட்டில் புகழ்பெற்ற ராப் பாடகரான பாட்ஷாவை மிருணாள் தாக்கூர் டேட் செய்து வருவதாக வதந்திகள் கிளம்பின. இந்த வதந்திகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த தீபாவளி பண்டிகையின் போது பாட்ஷா மற்றும் மிருணாள் தாக்கூர் நிகழ்ச்சி ஒன்றில் கைக்கோர்த்தபடி சேர்ந்து காணப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து இது குறித்த வதந்திகள் மேலும் அதிகமாகிய நிலையில் தற்போது ராப் பாடகரான பாட்ஷா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மறைமுகமான பதிவிட்டுள்ளார்.


ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும்






இந்தப் பதிவில் “அன்பிற்குரிய இணையவாசிகளே, நீங்கள் யோசிப்பது உண்மை இல்லை . ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த வதந்திகள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகி இருக்கிறது.