1997 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷனில் தொடராக ஒளிபரப்பான சக்திமான் இந்தியன் வெர்ஷன் சூப்பர்ஹீரோ. 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார். இந்நிலையில் காலப்போக்கில் மறந்துபோன சக்திமானை 2020 லாக்டவுன் நினைவூட்டியது. மீண்டும் ஒளிபரப்பான அந்த தொடரை பலரும் பார்த்து ரசித்தனர்.


 டி.ஆர்.பி.யிலும் பல முன்னணி தொடர்களை முந்தியது. இந்தநிலையில் தான் அதனை திரைப்படமாக தயாரிப்பதாக அறிவித்தது சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ். மொத்தம் 3 பாகங்களில் இது தயாரிக்கப்படுகிறது. 






இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள டைட்டில் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதில் சக்திமானுக்கு பிரத்யேக ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.  “மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிலவுவதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது.” என்றும் அந்த டீசரில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் சக்திமான நடிக்க நடிகர் ரன்வீர்கபூர் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






சூப்பர் ஹீரோவாக நடிக்க ரன்வீர் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் சக்திமான் மீது அவர் பார்வை விழுந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ரன்வீர்சிங் தரப்பில் இருந்தோ, தயாரிப்பு நிறுவனிடத்திடம் இருந்தோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.