பெங்களூருவை சேர்ந்த நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார். ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தீபிகா படுகோன் தற்போது சுமார் 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். புதிய படங்களுக்கு சம்பளமாக 10 முதல் 12 கோடி வரை வாங்குகிறார். இவர் பாலிவுட்டின் சிறந்த ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த ரன்வீர் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதனிடையே மும்பையில் பிரபாதேவி ஏரியாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4 பெட்ரூமுடன் கூடிய ஃபிளாட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூருவிலும் விலை உயர்ந்த அப்பார்ட்மென்ட் ஒன்றையும் இந்த ஜோடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.






இந்த ஜோடி சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால், இவர்களுக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளனர். பாலிவுட் வட்டாரம் மிகவும் விரும்பும் பிரபலமான ஜோடியாக இது திகழ்கிறது. இவர்கள் போடும் பதிவுகளுக்கு இவர்களது ரசிகர்கள் உருகி உருகி லைக் செய்வது வழக்கம். தீபிகாவை ப்ரோமோட் செய்வதில் முதல் ஆளாக ரன்வீர் சிங் இருக்கிறார். அவரது மனைவியை புகழ்வதற்காகவே சமூக வலைத்தளங்களுக்கு வருகிறார். சமீபத்தில் அவர் போட்டிருந்த ஒரு டீவீட்டில் தீபிகா படுகோனே போலவே இமிடெட் செய்து மோஜ் ஆப்பில் வெளியிட்டிருந்த விடியோவை பகிர்ந்து, "உனது மினி வெர்ஷனை பார்" என்று தீபிகா படுகோனேவை டேக் செய்திருந்தார்.


மேலும் "லவ் த எக்ஸ்ப்ரஷன்ஸ்" என்று அவருடைய நடிப்பை புகழ்ந்திருந்தார். அதுமட்டுமின்றி அவரை "சோட்டி தீபிகா" என்று குறிப்பிட்டுருக்கிறார். அந்த விடியோவில் ராம்லீலா திரைப்படத்தில் இருந்து ஒரு வசனத்தை அவர் இமிடேட் செய்திருந்தார்.






அந்த பதிவு வைரலானது மட்டுமின்றி 'சோட்டி தீபிகா' என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை எழுவதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்திருக்கின்றனர். இரண்டாயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், நானுற்று ஐம்பது ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது. ரன்வீர் சிங் சமீபத்தில் 83 திரைப்பட வெளியீட்டிற்கு பிறகு அந்நியன் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். தீபிகா படுகோனே பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகும் கெஹ்ராயன் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.