நடிகர் ரன்வீர்சிங் இன்ஸ்சூரன்ஸ் முடிந்து போன காரை ஓட்டியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது குறித்தான உண்மை தற்போது வெளியாகி இருக்கிறது. 


பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர்சிங். கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் மனிஷ் ஷர்மாவின் இயக்கத்தில் வெளியான  ‘பாண்ட் பஜா பாரத்’  படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கார் பிரியரான இவர் பல விலையுர்ந்த கார்களை வைத்திருக்கிறார்.




இந்த நிலையில் அவரின் மீது நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் சில ஆதாரங்களுடன் குற்றசாட்டு ஒன்றை முன்வைத்தார். அந்தக்குற்றசாட்டில்  நடிகர் ரன்வீர்சிங் தான் வைத்திருக்கும் ஆஸ்டன் மார்டின் காரை, அதற்கான இன்சூரன்ஸ் முடிந்தும் ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி அதில் மும்பை காவல்துறையையும் டேக் செய்திருந்தார்.




இதற்கு பதிலளித்த மும்பை காவல்துறை இதனை போக்குவரத்து காவல்துறைக்கும் அனுப்புவதாக கூறியது.




இந்தத்தகவல் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்தான உண்மை சரிபார்க்கப்பட்டது. அந்த சரிபார்ப்பில் நடிகர் ரன்வீர் சிங் வைத்திருக்கும் காருக்கு முறையான இன்சூரன்ஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆஸ்டன் மார்டின் காரை ரன்வீர்சிங் கடந்த 3  வருடங்களுக்கு முன்னர் 3.9 கோடிக்கு வாங்கி இருந்தார். 


 






சினிமாவில் நடிக்கும் அதே சமயம் அவருக்கு மாடலிங் மீதும் ஈர்ப்பு அதிகம். அதற்காக அவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அதற்காக தனது ஹேர் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் என பல வெரைட்டி காட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடத்திய நிர்வாண போட்டோஷூட் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அப்போது பேசிய அவர், ’நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்க தயங்க மாட்டேன். ஆனால், என் முன்னால் இருப்பவர்கள் அசெளகரியம் அடைகிறார்கள் என்பது தான் உண்மை’ என்று கூறியிருந்தார். இது தொடர்பாக என்ஜிஓ சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து செம்பூர் காவல்நிலையத்தில் ஆஜரான ரன்வீர் சிங் இந்த போட்டோஷூட் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை என்று கூறினார்.