ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் சர்க்கஸ் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. "கரண்ட் லகாரே" என்ற இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


                     


ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் இணைந்து நடனமாடும் அந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை நகாஷ் ஆஸிஸ், த்வானி பனுசாலி, ஜோனிடா காந்தி, லிஜோ ஜார்ஜ் ஆகியோர் பாடியுள்ளனர். அதில் வரும் தமிழ் ராப் விவேக் ஹரிஹரன் பாடியுள்ளார். குமார் பாடலின் வரிகளை எழுதியுள்ளார். தமிழ் ராப் வரிகளை ஹரி எழுதியுள்ளார்.


"கரண்ட் லகாரே" என்ற இந்த பாடலின் வீடியோவை தீபிகாவும் ரன்வீரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ''கரண்ட் லகாரே சர்க்கஸ் திஸ் கிறிஸ்மஸ்'' என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளனர். 






ஆங்கில நாவலாசிரியர் சேக்ஸ்பியரின் டிராமாவில் இருந்து எடுக்கப்பட்ட கதை சர்க்கஸ். சர்க்கஸ் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதில் பூஜா ஹெக்டே, வருண் ஷர்மா, சஞ்சய் மிஸ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர். சர்க்கஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 23 ஆம் நாள் வெளியாகிறது 


ரோஹித் ஷெட்டியும் ரன்வீர் சிங்கும் மூன்றாம் முறை இணையும் ப்ராஜெக்ட் சர்க்கஸ். இவர்கள் இருவரும் இதற்கு முன் 2018 இல் வெளிவந்த 'சிம்பா' திரைப்படத்திலும், சூரியவன்சி திரைப்படத்திலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.






இதைத் தொடர்ந்து ரோஹித் செட்டியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே "சிங்கம் அகெயின்" என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ரோஹித் செட்டியின் பிரபல காப் யுனிவர்சில் முதல் பெண் போலீஸாக தீபிகா களம் இறங்குகிறார் என்பது கூடுதல் தகவல்!