மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், சென்னையில் உள்ள கடலோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள "Mandous" புயல் சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தொலைவில் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது, மேலும் டிசம்பர் 09 நள்ளிரவில், காற்றானது அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
மழை எச்சரிக்கை
இன்று, வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திராவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் வட உள் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது,
டிசம்பர் 09 அன்று வட தமிழ்நாடு ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பத்தாம் தேதி பொருத்தவரையிலும் வட தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்கள் டிசம்பர் 8 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், டிசம்பர் 10 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலுக்கும்,
டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இலங்கை கடற்கரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
டிசம்பர் 08-10 தேதிகளில் ஆந்திரா கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் அல்லது கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read: TN Rain News LIVE: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரிப்பு- வானிலை மையம்