Ranveer - Deepika: தனித்தனி கார்களில் செல்லும் ரன்வீர் - தீபிகா தம்பதி: விவாகரத்து கன்ஃபார்ம்?

பாலிவுட் காதல் தம்பதியினர் ரன்வீர் மற்றும் தீபிகா படூகோன் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இதனை உறுதிபடுத்தி விதமாக ரசிகர்கள் மற்றொரு நிகழ்வை சுட்டிக் காட்டியுள்ளார்கள்

Continues below advertisement

ரன்வீர் தீபிகா ஜோடி

முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படூகோன் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ராம்லீலா படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தின் போதே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துவிட்டதாக தீபிகா படூகோன் தெரிவித்தார். எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் மிகப்பெரிய ஸ்டார்களான இந்த இருவரின் மீதும் இளம் தலைமுறையினர் பெரும் மரியாதை வைத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ரன்வீர் மற்றும் தீபிகா இடையிலான காதல் உறவு,  ஒருவர் இன்னொருவரை பார்த்து ரசிக்கும் விதம் என இன்றையத் தலைமுறையினரின் லட்சிய காதல் ஜோடிகளாக இருந்து வருகிறார்கள். கிட்டதட்ட 11 ஆண்டுகளாக காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்து வரும் இந்த தம்பதியினர் தங்கள் விரைவில் பெற்றோர்களாக ஆக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார்கள். ஆனால் கடந்த சில வாரங்களால சமூக வலைதளங்களில் அதிர்ச்சியளிக்கும் பல விதமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. 

Continues below advertisement

விவாகரத்து பெறப் போகிறார்களா ரன்வீர் தீபிகா

ரன்வீர் சிங் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது திருமண புகைப்படங்களை நீக்கியதில் இருந்து தொடங்கியது இந்த பிரச்சனை. தனது மனைவி தீபிகாவுடனான மற்ற புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தாலும் திருமண புகைப்படங்களை மட்டும் அவர் நீக்கிய காரணத்தை யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ரன்வீர் தீபிகா இருவரும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளத்தில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக இருவரது தரப்பிலும் எந்த விதமான விளக்கமும் அளிக்கப் படாததால் இந்த வதந்திகள் மேலும் வலுப்பெறத் தொடங்கின. 

வெவ்வேறு கார்களில் பயணம்

தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவை இந்த விவாகரத்துடன் தொடர்பு படுத்தி விவாதித்து வருகிறார்கள் ரசிகர்கள். ரன்வீர் மற்றும் தீபிகா தங்களது மதிய உணவை ஒரு விடுதியில் முடித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இருவரும் தனித்தனி கார்களில் செல்வது ரசிகர்களிடம் பல கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு சிலர் தீபிகா தனது வீட்டிற்கு செல்கிறார்.  ரன்வீர் படப்பிடிப்பு தளத்திற்கு செல்கிறார் இதில் என்ன குழப்பம் என்று விளக்கம் கொடுத்தாலும் இன்னொரு பக்க ரசிகர்களின் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இருவரும் தனித்து வாழ்வதன் அடையாளமாக இருவரும் தனித்தனி கார்களில் செல்வதாக அவர்கள் இன்னொரு அனுமானத்தை முன்வைக்கிறார்கள். இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

Continues below advertisement
Sponsored Links by Taboola