Rangamma Paati : 'உழைத்து வாழ வேண்டும்.. எம்ஜிஆர் சொன்னாரு'; ரங்கம்மா பாட்டி சொன்ன மந்திரங்கள்..

பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் காலமானார்.

Continues below advertisement

பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் காலமானார்.

Continues below advertisement

இந்நிலையில் அவர் எப்போதோ ஒரு யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டி இப்போது கவனம் பெற்றுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், தான் ஏன் பீச்சில் பொருட்கள் விற்கிறேன் என்பது தொடங்கி சினிமா அனுபவம் வரை பல விசயங்களைப் பகிர்ந்துள்ளார். பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் காலமானார்.

"ஐய்யா எனக்கு சினிமாவுல நடிச்சா சம்பளம் வரும். கணவர் பென்ஷன் கொஞ்சம் வரும். ஆனா அது பத்துமா? பத்தாது. வாடகையே 4000 ரூபாய் கொடுக்கணும். அதனால் தான் பீச்சில் பேனா, பென்சில், டார்ச் லைட், கவரிங் நகை விற்கிறேன். யார் கிட்டையும் கையேந்தக் கூடாது. உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதேன்னு எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார். அதனால் என் கடைசி ஆயுசு வரை உழைப்பேன்.

என்னை எனது உறவுகள் கைவிட்டுவிட்டதாகவும். நான் பிச்சையெடுப்பதாகவும் செய்தி போட்டிருப்பதாக ஒரு போலீஸ்காரர் கூறினார். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. சாகும் வரை நான் நடிப்பேன். பீச்சில் பொருட்கள் விற்பேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் எந்த நடிகரிடமும் போய் நான் பண உதவி கேட்டதில்லை. ஆனால், நடிகர் சரத்குமார், நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கொஞ்சம் பண உதவி செய்தனர். எனக்கு 12 பிள்ளைகள். அதில் 6 பெண்கள், 6 மகன்கள். என் பேத்தி ராஜேஸ்வரி விண்ணைத் தேடி வந்தாயா படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியாக நடித்தவர் என் மகள் பிள்ளை. நடிகர் எம்ஜிஆர் எனக்கு அந்தக் காலத்திலேயே எனக்கு ரூ.10,000 கொடுத்தார். எம்ஜிஆருடன் 7 படங்களில் நான் நடித்திருக்கிறேன்.

நான் சினிமாவில் இப்படி நடிக்கணும், அப்படி நடிக்கணும்னு ஆசைப் பட்டதே இல்லை. என்ன வேஷம் கொடுத்தாலும் நடிப்பேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன். எம்ஜிஆர், ஜானகி அம்மா கூட பழகியதால் எனக்கு சொத்து மீது ஆசையில்லை. எல்லாவற்றையும் என் உறவுகளுக்குக் கொடுத்துவிட்டேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

85 வயதான இவர், கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ரங்கம்மாள் பாட்டி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1967ல் வெளி வந்த விவசாயி திரைப்படத்தில், தயாரிப்பாளர் சின்னப்பா தேவரால் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் வரை பல நடிகர்களுடன் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த ஒரு திரைப்படத்தில், “போறது தான் போற ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ” என ஒரு பாட்டி சொல்லும் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சினிமா வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில், வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்த அவர், சொந்த ஊரான தெலுங்குபாளையத்துக்கு திரும்பினார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்தாலும் பெரிதாக ஏதும் சம்பாதிக்காத அவர், வீடு ஏதுமின்றி வாடகைக்கு கூரை வீட்டை ஒன்றை எடுத்து தங்கி இருந்தார். அவரை அவரது சகோதரிகள் மற்றும் அவரது மகன் கவனித்து வந்தனர்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவினால் கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டியின் வறுமை நிலை ஊடகங்கள் மூலமாக தெரியவந்தது.

Continues below advertisement
Sponsored Links by Taboola