Watch Video : இது புதுவித உணர்வு... இதுவரை நான் அனுபவித்ததே இல்லை... மகள் ராஹா பற்றி மனம் திறந்த ரன்பீர்... வைரலாகும் வீடியோ 

எனது மகள் ராஹா பிறந்த பிறகு அது எனக்கு ஒரு வித்தியாசமான உணர்ச்சியை கொடுத்தது. எனது உடலில் புதிதாக ஒரு சக்கரத்தை ஆக்டிவேட் செய்தது போல உணர்கிறேன் - ரன்பீர் கபூர்

Continues below advertisement

 

Continues below advertisement

பாலிவுட்டின் கியூட் நட்சத்திர தம்பதிகளான நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட்டின் மிகவும் பிரபலமான இந்த இரு முகங்களும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து பின்னர் மணமுடித்து கொண்டனர். இந்த அழகான ஜோடிகளுக்கு நவம்பர் 2022ல் தங்கள் மகள் ராஹாவை  வரவேற்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல் முறையாக தனது மகள் ராஹா பற்றி மனம் திறந்தார் நடிகர் ரன்பீர் கபூர். 

 

 

நடிகர் ரன்பீர் கபூர் தற்போது 'து ஜூதி மைன் மக்கார்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டு வரும் ரன்பீர் கபூர் தந்தையாக இருக்கும் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். ராஹா பிறக்கும் வரையில் என் வாழ்க்கையில் உணர்ச்சி என்ற ஒன்று இருப்பதை நான் உணர்ந்ததே இல்லை என அவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

 


மேலும் ரன்பீர் கபூர் பேசுகையில் " நான் எனது மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் எனது மகள் ராஹா பிறந்த பிறகு அது எனக்கு ஒரு வித்தியாசமான உணர்ச்சியை கொடுத்தது. எனது உடலில் புதிதாக ஒரு சக்கரத்தை ஆக்டிவேட் செய்தது போல உணர்கிறேன். இதுவரையில் எனது வாழ்வில் நான் இது போல உணர்ந்ததே இல்லை. இந்த உணர்வு எனக்கு முழு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நான் எப்போதும் வீட்டில் இருக்கவே விரும்புகிறேன். அவளுடன் இருக்கவே விரும்புகிறேன். என்னால் இந்த உணர்வை விளக்கி கூற இயலவில்லை. உலகத்திலேயே இது மிகவும் சிறந்த ஒரு உணர்வு என ரன்பீர் கூறினார். 


கடத்த ஆண்டு நடைபெற்ற ஒரு நேர்காணலில் தாய்மை பற்றியும் அது தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது குறித்தும் ஆலியா பேசியிருந்தார். "தாய்மை என்னை இந்த காலக்கட்டத்தில் மிகவும் புதுமையாக மாற்றிவிட்டது. ராஹா பிறந்து ஒரு மாதம் கூட முழுமையாக முடிவடையவில்லை. மூன்று வாரங்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள் எனது விருப்பங்களை மாற்றிவிட்டது. நான் அனைத்தையும் பார்க்கும் விதமே முற்றிலுமாக மாறிவிட்டது. வேறு எதை பற்றியும் நான் சிந்திப்பதில்லை. என் இதயம் முன்பு இருந்ததை விட சற்று ஓபன் அப் ஆகியிருப்பதாக நான் உணர்கிறேன். இது மேலும் எனக்குள் என்னென்ன மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்பது எனக்கு தெரியாது. எனது பயணம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க நான் மிகவும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என கூறியிருந்தார் ஆலியா பட்.

Continues below advertisement
Sponsored Links by Taboola