தமிழ்நாடு:



  • கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க கல்வித்துறை நடவடிக்கை - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு

  • சென்னையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் - ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

  • கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சட்ட பாதுகாப்பு குறித்த தகவல் அடங்கிய புத்தகம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். 

  • ஆளுநர் மீதான குற்றச்சாட்டு மக்களை திசைதிருப்பும மலிவான முயற்சி என அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

  • கோகுல்ராஜ் கொலை வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

  • அ.தி.மு.க.-விற்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. எழுச்சியுடன் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

  • தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்தியா:



  • 'நாங்கள் பா.ஜ.க.விற்கு எதிரானவர்கள் என நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை' - ராகுல்காந்திக்கு பதிலடி தந்த மஹுவா மொய்த்ரா

  • டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு; விமானத்தில் இருந்து கீழே இறங்கியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கைது - உச்சநீதிமன்றம் உத்தரவால் உடனடியாக விடுதலை

  • இந்தியா- இலங்கை சேர்ந்த மாற்றுத்திறனாளி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வீரர்கள் அமைச்சர் உதயநிதியுடன் சந்திப்பு

  • ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர். கேசவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று திடீரென விலகியுள்ளார். 

  • 6 வயது ஆனால்தான் 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை வகுக்கக் கோரி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.


உலகம்:



  • உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் ரஷ்ய கல்லூரிகளில் சேர்ப்பு

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.20 கோடியாக உயர்வு

  • 2 நாள் பயணமாக ஜெர்மனி பிரதமர் நாளை இந்தியா வருகை - பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை.

  • பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் பாகிஸ்தான் - ஐநாவில் இந்தியா கண்டனம்.

  • உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அஜய் பங்காவை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்


விளையாட்டு: 



  • பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

  • டி.என்.எபி.எல். கிரிக்கெட் ஏலத்தில் அதிகபட்சமாக சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு கோவை கிங்ஸ் அணியும், ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் எடுத்தது.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என முன்னாள் இந்திய அணி வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

  • ஐபிஎல் 2023 தொடர்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.