Alia Bhatt - Ranbir Kapoor Wedding | டிசம்பரில் ஆலியா - ரன்பீர் திருமணம்? எங்கே? ரந்தீர் கபூர் கொடுத்த அப்டேட் இதுதான்..

ஆலியாவும் ரன்பீரும் வருகின்ற டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் இதனால் டிசம்பரில் இருந்த அத்தனை படப்பிடிப்பு வேலைகளையும் இருவரும் தள்ளிவைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

பாலிவுட்டில் இது கல்யாண சீசன். கடந்த சில தினங்களாக நடிகர்கள் கத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌசால் திருமணம் குறித்து பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் குறித்தும் நடிகர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆலியாவும் ரன்பீரும் வருகின்ற டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் இதனால் டிசம்பரில் இருந்த அத்தனை படப்பிடிப்பு வேலைகளையும் இருவரும் தள்ளிவைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இதுகுறித்து ரன்பீர் கபூரின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் ரந்தீர் கபூரிடம் கேட்டதில் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் மறுத்துவிட்டார். 

Continues below advertisement

முன்னதாக, ஆலியாவும் ரன்பீரும் இருவரும் சேர்ந்து பல பொது நிகழ்வுகளில் ஒன்றாகப் பங்கெடுத்து வருகின்றனர். மேலும் கடந்த மாதம் ரன்பீரின் பிறந்தநாளை ஆலியா ஜெய்ப்பூரில் கொண்டாடிய புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஆலியாவும் ஆர்.ஆர்.ஆர்., கங்குபாய் கத்தியாவாடி உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

Continues below advertisement