'பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி விலகிய நிலையில், அவரது கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டுள்ளது. 


விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு தினங்களுக்கு ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர் அன்றுடன் விடை பெறுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாராம். இதனால், கண்ணாம்மாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ரோஷினி சென்றுவிட்டால், அவரின் கதாப்பாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்று இந்த சீரியலின் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில், கண்ணாம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளின் பெயர் அடிப்பட்டுள்ளதாம். அதில், ஒருவர்  ‘ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி’,  ‘அபி டைலர்ஸ்’,  ‘யாரடி நீ மோகினி’ போன்ற தொடர்களில் நடித்த நக்‌ஷத்ரா நடிக்க உள்ளராம். இதேபோல், நடிகை வினுஷா தேவியும் கண்ணாம்மாவாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருவரில் யார் என்று கூடிய விரைவில் தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.




மாடலிங்கிலிருந்து டிவிக்கு வந்த ரோஷினிக்கு ’பாரதி கண்ணம்மா’தான் முதல் சீரியல். பிரைம் டைமில் அதுவும் சீரியல் ஹிட்டாகப் போய், நல்ல ரீச் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென நிகழ்ந்திருக்கும் அவரது வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து டிவி வட்டாரத்தில் மாறுபட்ட பேச்சுகள் கேட்கின்றன. சீரியலில் கிடைத்த பிரபலம் காரணமாக சமீபமாக அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் நிறைய வந்ததால் சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகவே வெளியேறி இருக்கிறார் என கூறப்படுகிறது.


நிறைய வருடங்கள் மாடலிங் துறையில் இருந்திருந்தாலும் நடிப்புக்கான வாய்ப்புகள் அவளது டஸ்கி ஸ்கின் டோன் காரணமாக வரவில்லையாம். அதன் பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் வந்ததுதான் பாரதி கண்ணம்மா வாய்ப்பாம், சீரியல் ஹிட் ஆனதிலிருந்து நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் இமேஜ் எப்படி உதவும் என்று தெரியவில்லை என கருதுவதாக பலர் தெரிவித்ததுதான் இந்த முடிவுக்கு காரணமாக இருக்குமென நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண