பிரபல பாலிவுட் ஜோடி ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் கையோடு கைக்கோர்த்து ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் தான் ரன்பீர் கபூர். அதேபோல், இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் பிரபல நடிகை ஆலியா பட். இருவரும் பாலிவுட்டில் முன்னனி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாவே காதலித்து வருகின்றனர். 


சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆலியாபட், ரன்பீர் கபூர் மீதான விருப்பத்தை பல நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ஆலியா பட் கலந்துகொண்டார். அப்போது தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்தான் என்பதை கூறினார். அப்போது பாலிவுட் வட்டாரத்தில் இது பெரும் பேசுபொருளாக மாறியது. 


தொடர்ந்து ரன்பீருடன் ஆலியா பட் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரமாஸ்திரா எனும் அந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனிடையே அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதற்கு அவர்கள் மவுனத்தையே பதிலாக அளித்து வந்தனர். 






இதையடுத்து ரன்பீர் அளித்த பேட்டி ஒன்றில், ஆலியா மீதான காதலை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவர்களுக்கு இருவீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்த்த நேரத்தில் ரன்பீரின் தந்தை உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் திருமணம் தள்ளிபோனது. கொரோனா காலகட்டத்தில் ரன்பீரின் தந்தையும் காலமானார். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதனிடையே கிடைத்த நேரத்தில் பிடித்த இடங்களுக்கு ரன்பீரும், ஆலியா பட்டும் விசிட் அடித்து வருகின்றனர். அதன்படி நேற்று இரவு இருவரும் பிளாக் அண்ட் பிளாக் உடையில் பிரபல உணவகம் ஒன்றிற்கு சென்று திரும்பும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் உணவகத்தில் இருந்து வெளியே வரும் ஆலியா பட்டை ரன்பீர் கபூர் கையை பிடித்து அழைத்து கொண்டு காருக்கு வருகிறார். இருவரும் கையோடு கைக்கோர்த்து வருவதை பார்த்த ரசிகர்கள் அருமையான ஜோடி என புகழ்ந்து வருகின்றனர்.