விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர், பலதரப்பட்ட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற, தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் அந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிர் அகிலன், திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதற்கு அவர் பல காரணங்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சீரியல் இயக்குனருடன் ஏற்பட்ட மனகசப்பே சீரியலில் இருந்த வெளியேற காரணம் என்பதைப் போன்ற கருத்துக்களை கூறியுள்ளார். மேலும், தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும், அவர் கூறியுள்ளார். இதோ அவரது பேட்டி.




‛‛பாரதி கண்ணம்மா சீரியலில் விலகியது எனக்கு மகிழ்ச்சியை தான் ஏற்படுத்தியது. என்னை பொருத்தவரை சிறந்ததை கொடுத்திருக்கேன் என நினைக்கிறேன். எனக்கு கொடுத்த இடத்தில், நான் விளையாடியிருக்கிறேனன். எதுவுமே இல்லாமல் நான் போகவில்லை. எனக்கு பட வாய்ப்பு வந்ததால் தான் நான் போனேன். ஒரு விசயம் பண்ணிட்டு இருக்கும் போது; பாதியில் போறோமே என்று தோன்றியது உண்மை தான். எனக்கான ஸ்பேஸ் அங்கு இல்லை. ஹீரோவா இருந்திருந்தால் நான் விலகியிருக்க மாட்டேன். 


எல்லா விசயத்திலும் ஹீரோ தான் கொண்டாடப்படுகிறார். நாம என்ன தான் முக்கி முக்கி நடித்தாலும், எனக்கு பெயர் வராது. நான் ஒரு சின்ன தம்பி கதாபாத்திரத்தில் தான் நடித்தேன். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. நான் வெளியேறியதால் எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. நல்ல கதை, யார் இருந்தாலும், இல்லை என்றாலும் ஓடும். எனவே நான் வெளியேறியது பெரிய விசயமில்லை. வெளியேறியது எனக்கு மகிழ்ச்சி தான். நான் வெளியேறும் போது, உடன் நடித்த பலரும் எனக்கு போன் செய்து வருந்தினர். சிலர் அழுதனர். இயக்குனர் என்னிடம் போன் செய்து பேசவில்லை. நான் அவர்களுக்கு அவ்வளவு முக்கியம் அல்ல. மற்றபடி சக நடிகர்களை மிஸ் செய்கிறோம் என்கிற கவலை என்னிடம் இருந்தது. மற்றபடி நான்,மகிழ்வோடு தான் வெளியேறினேன்,’’ என்றார்.




இதோ போல, அதே சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த கண்மணியும், அகிலனின் வெளியேற்றம் குறித்து பேசியுள்ளார். இதோ அவர் பேசியது: 


‛‛அகிலனுக்கு பதில் புதிதாய் வந்தவர் நன்றாக தான் நடிக்கிறார். அகிலன் இல்லாதது எனக்கு வருத்தம் தான். நாங்கள் எல்லோரும் ஒன்றாக தொடங்கினோம். அகிலன் சென்றதை என்னால் ஏற்க முடியவில்லை. அடுத்து புதிதாக ஒருவரை ஏற்க சிரமப்பட்டேன். நான் முதலில் நடித்தது அவருடன் தான். அவர் ஹீரோயின்களை நன்றாக பார்த்துக் கொள்வார். நிறைய பேர் என்னிடம் அப்படி தான் கூறினார்கள். அகிலனை நாங்கள் ரொம்ப மிஸ் செய்கிறோம்,’’ எனக்கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண