எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஒலிவியா மோரிஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.


கடந்த மார்ச் 25ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனை செய்தது. 


அதன் பின்னர் கடந்த மே 20ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி அங்கு பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அந்தப்படத்தை பல மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.


அந்த வகையில் ஜப்பானில் அந்நாட்டு மொழியில் நாளை அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.


இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பிரோமோட் செய்யும் விதமாக, ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். 


 






 ஜப்பானில் நடைபெற்ற ப்ரொமோஷன் பணிகளில் பங்குபெற்ற ராம் சரண், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


ராம்சரணின் மனைவி உபாசனாவும் அவருடன் ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், முன்னதாக தன் ஜப்பான் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ராம் சரண் பகிர்ந்துள்ளார்.


ஜப்பானில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஜூனியர் என்.டி.ஆருக்கு அங்கு பணிபுரியும்  தூய்மை பணியாளர் ஒருவர், ஜீனியர் என்.டி.ஆர் பற்றிய தனது நினைகள் மற்றும் தன்னைச்சார்ந்த வர்களுடைய நினைவுகளை ஒரு அட்டையில் எழுதி அவர் கையில் கொடுத்தார். இதனை வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர் அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.