கல்யாணம் என வதந்தியை பரப்பிவிட்ட பத்திரிகையாளரை நடிகை ரகுல் ப்ரீத்சிங் கலாய்த்து உள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் என்பவர் பிரபல நடிகை என்று அனைவருக்கும் தெரியும்.தமிழில் அவர் நடித்த தடையறத்தாக்க தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் என்.ஜி.கே, ஆகிய படங்கள் கவனம் ஈர்த்தன. இன்னும் சொல்லப்போனால் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அனைவரின் மனதில் இவர் இடம்பிடித்தார் என்றே சொல்லலாம்.
தமிழில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு, இவர் சில படங்களில் நடித்தாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் இவர் செம பிரபலம். சமீபத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் தங்களின் காதலிகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தனர். அதுபோல், ரகுல் ப்ரீத் சிங்கும் அடிக்கடி அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அவரின் காதலன் ஜாக்கி பக்னானியுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதையெல்லாம் பார்த்த பிரபல பத்திரிக்கை ஒன்று, ரகுல் கூடிய விரைவில் இவர் கல்யாணம் செய்யபோகிறார் அதுவும் 2023-ல் கல்யாணம் நடக்கும் என செய்தி வெளியிட்டனர். அதற்கு நடிகை ரகுல், “ அப்படியா நீங்க சொல்லவே இல்ல.. என் வாழ்க்கை பற்றி எனக்கே எதுவும் தெரியவில்லை அதற்குள் செய்தி வந்துவிட்டதா.. இது வேடிக்கையாக இருக்கிறது ” என்று ட்வீட் செய்து இருந்தார்.
இவர்கள் காதலிப்பதாக, கடந்த ஆண்டே அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டனர். ஆனால், திருமணம் செய்து கொள்ளபோவதாக எந்த அறிவிப்பையும் இவர்கள் வெளியிடவில்லை. தற்போது, ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2 படத்திலும் அயலான் படத்திலும் நடித்துவருகிறார். நண்பர்களுடன் சேர்ந்து, இவர் தன் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடி முடித்தார்