ஜெயிலர் படத்தை முடித்துக் கொண்டு இமயமலைக்கு சென்றுள்ள ரஜினியின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர். 


நெல்சன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ஜெயிலர்.  இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து அசத்தி உள்ளார். மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


மகனின் மரணத்துக்கு காரணமாக சிலை கடத்தல் குழுவை பழிவாங்கக் கிளம்பும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் கதை தான் ஜெயிலர் படம். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளார் ரஜினி. கடந்த 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காத அளவுக்கு வசூல் வேட்டையை ஜெயிலர் படம் செய்து வருகிறது. மூன்றாவது நாளாக உலகமெங்கும் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.200 கோடியை நெருங்கி உள்ளது. 



Rajinikanth: இமயமலை பயணத்தில் ரஜினி இப்போ எங்க இருக்காரு...?! வைரலாகும் புகைப்படங்கள்!


முன்னதாக படப்பிடிப்பை முடித்துக் கொண்ட ரஜினி ஓய்வுக்காக மாலவுத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது மாலத்தீவு கடற்கரையில் ரஜினி நடக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் படம் ரிலீசாவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இமயமலை பயணத்தை ரஜினி தொடங்கினார்.


கொரோனா பரவலால் 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து முடித்ததுடன் இமயமலைக்கு சென்றுள்ளார். ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினியின் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வபோது வெளியாகி வருகிறது. 






அந்த வகையில், இமயமலைக்கு செல்வதற்கு முன்னதாக பத்ரிநாத் கோயிலுக்கு சென்ற ரஜினி, ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. கடைசியாக 2019ஆம் ஆண்டு அண்ணாத்த படத்தில் நடித்திருந்த ரஜினி இமயமலைக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் நடிக்க: Rajinikanth: 'ரஜினிக்கு எதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம்?' .. எஸ்.வி.சேகர் கேட்ட கேள்வி.. அதிர்ந்த அரங்கம்..!