பிக்பாஸ் சீசன் 7:


பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர்.


சண்டை, சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதாவது, 98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். 


டைட்டில் வின்னரான அர்ச்சனா!


இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர்.


இதில், அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28ஆவது நாளில் அவர் வீட்டிற்கு நுழைந்தார்.


அர்ச்சனா மொத்தம் 77 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார். இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, 77 நாட்கள் இருந்து அர்ச்சனாவுக்கு ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அர்ச்சனாவின் மொத்த சம்பளம்


அத்துடன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையுடன் அவரது சம்பளம் ரூ.15 லட்சத்தையும் சேர்த்து,  மொத்தமாக 65 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றிருக்கிறாராம்.  வைல்டு கார்டு என்டரியாக வந்த அர்ச்சனாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.  


அர்ச்சனாவுக்கு சின்னத்திரை மக்களின் மத்தியில் பிரபலம் இருக்கும் நிலையில், அவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.  அதேபோல, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவருடைய விளையாட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.


எனவே,  தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா உருவெடுத்துள்ளார். 


பி.ஆர். வேலை பார்த்தாரா அர்ச்சனா?


இதற்கிடையில், "அர்ச்சனா ஒன்றும் செய்யவில்லை, பிஆர் வேலை பார்த்து தான் இந்த டைட்டிலை வென்று இருக்கிறார். குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளார் அர்ச்சனா. இதை ஏற்க முடியாது” என்று ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  அதே நேரத்தில், "ரியல் வின்னர் பிரதீப்  ஆண்டனி, ஆட்ட நாயகன் பிரதீப்”, என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். நேற்றில் இருந்தே பிரதீப்புக்கு ஹேஸ்டேகுகளும் வைரலாகி வருகிறது.


மற்றொரு பக்கம், டாக்சி மாயா (Toxic Maya) என்று ஹேஸ்டேகும் வைரலாகி வருகிறது. சிலர் Magic Maya என்றும் ஹேஸ்டேகுகளுடனும் அவரை உற்சாகப்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். ”பிக்பாஸ் வீட்டில் மாயா இல்லை என்றால் எண்டர்டெயின்மென்ட் இருக்காது. நீங்க தான் டைட்டில் வின்னர்" என்று கூறி வருகின்றனர்.


 மேலும், இரண்டாம் இடம்பிடித்த மணிசந்திராவை கடுமையாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ”இவ்வளவு நான் என்ன பண்ணாரு மணி? இவரு ஏன் இவ்வளவு தூரம் வந்தாரு?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.