ஆந்திராவின் தொழிலதிபரான ராமோஜி ராவ் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


ஆந்திராவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான செருகூரி ராமோஜி ராவ் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஜூன் 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இதய கோளாறுகள் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக பெரிதும் அவதிப்பட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் ராமோஜி ராவ் உடல்நிலையில் முன்னேற்றமில்லாமல் இன்று உயிரிழந்தார். 


87 வயதான ராமோஜி ராவ் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி,  ஈநாடு நியூஸ் பேப்பர், ஈ டிவி நெட்வொர்க், உஷா கிரண் மூவிஸ் மார்கதர்சி சிட் ஃபண்ட்,ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி,ஹோட்டல் டால்பின் குரூப் ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார். இதனிடையே ராமோஜி ராவ் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். அவற்றை பற்றி காணலாம். 


நடிகர் ரஜினிகாந்த்


எனது வழிகாட்டியும், நலம் விரும்பியுமான ஸ்ரீ ராமோஜி ராவின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த வரலாறுகிங் மேக்கராக  படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.


நடிகர் வெங்கடேஷ் 




ராமோஜி ராவ் ஒரு உண்மையான தொலைநோக்கு பார்வையாளராக இருந்தவர். இந்திய ஊடகங்களில் அவருடைய புரட்சிகர பணி மறக்க முடியாத பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது. பத்திரிகை மற்றும் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. அவர் மிகவும் தவறவிடப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு


ஈ நாடு குழும நிறுவன தலைவர் ஸ்ரீ ராமோஜிராவ் மறைவு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.அவர் தெலுங்கு மக்களின் சொத்து.அவரது மறைவு ஒட்டுமொத்த தேசத்துக்கும் இழப்பு. ஊடகத் துறையில் பல சவால்களை, சிக்கல்களை முறியடித்து யாருக்கும் தலை வணங்காமல் ராமோஜி ராவ் மதிப்புடன் நிறுவனங்களை வழிநடத்தினார். ஊடகத் துறையில் அவர் ஒரு சிகரம். அவருக்கு எனக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு உள்ளது. பிரச்சனைகளை எதிர்த்து போராட அவர் எனக்கு ஒரு ஊக்கம் அளித்துள்ளார். மக்களுக்கு நல்ல கொள்கைகள் வழங்கும் விஷயத்தில் ராமோஜியின் ஆலோசனைகள் எப்போதும் உயர்வாக இருக்கும். ராமோஜிராவ் அவர்களின் ஆத்மாவுக்கு சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.