Rajini Vettaiyan Movie: டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங், ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற உள்ளதாகவும், அதில் ரஜினியுடன் பகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் ரஜினியின் வேட்டையன் படம். ரஜினியின் 170வது படமாக உருவாகி வரும் வேட்டையன் படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

 

ஆந்திராவில் ஷூட்டிங்:


 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வேட்டையன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட  படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் கடப்பாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் ரஜினியுடன், ஃபகத் பாசில் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேட்டையன் படத்தின் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து நடிக்க உள்ளார். 

 





 

அண்மையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில், விநாயகன் வில்லனாகவும், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்தது. மோகன்லால், ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்தனர். இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 

 

அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்திலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே நெல்சன் இயக்க இருக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.