'3’, ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம், ‘லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ பாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர். பிரபல 80கள் நடிகை ஜீவிதா ரஜினியின் தங்கையாக இந்தப் படத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் செந்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், லைகா இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மொய்தீன் பாய் கெட் அப்பில் நடிகர் ரஜினிகாந்த தன் வழக்கமான ஸ்டைலிஷ் நடையுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் காட்சி முன்னதாக வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்தின் மற்றுமொரு வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த கார் ரூஃப் மீது ஏறி தன் ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. லால் சலாம் திரைப்பட ஷூட்டிங் புதுச்சேரியில் நேற்று முன் தினம் (ஜூன்.01) தொடங்கிய நிலையில், வரும் 17ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஷூட்டிங் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாள்களாக புதுச்சேரி AFT மில்லில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு ரஜினிகாந்தைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
முன்னதாக ரஜினியின் மொய்தீன் பாய் பாத்திர கெட் அப் உடன் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரோல்களை சந்தித்தது.
இஸ்லாமியர் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் தொப்பி அணிந்து இருப்பது போல், அவருக்கு பின்னணியில் கலவரம் வெடித்தது போல் காட்சிகள் போஸ்டரில் இடம்பெற்றிருந்த நிலையில், தொப்பி வாப்பா பிரியாணி புகைப்படத்துடன் மொய்தீன் பாய் கெட் அப்பை ஒப்பிட்டு, நெட்டிசன்கள் மீம்ஸ் இறக்கி கலாய்த்த்த் தள்ளினார்.
மற்றொருபுறம் இந்த கெட் அப் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளியும் வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்திய லால் சலாம் படத்தில் உலகக்கோப்பை வென்று கொடுத்த கிரிக்கெட் வீரட் கபில்தேவ் ரஜினியுடன் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.