நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தொடந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 3 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா என்பதுபோல தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 


தமிழ்நாட்டில் 900, கேரளாவில் 400, கர்நாடகாவில் 1093 ஸ்க்ரீன் என இதுவரை இல்லாத அளவுக்கு படம் திரையிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்டுகள் என தியேட்டர் வளாகங்களும் களைகட்டியுள்ளது. இப்படியான நிலையில் ஜெயிலர் படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.49 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. தொடர்ந்து 2வது நாள் வார நாளாக இருந்ததால் வசூலில் சிறிது சரிவை சந்தித்தது. ஜெயிலர் படம் 2வது நாளில் 25 கோடி ரூபாய் வசூலானதாக தெரிவிக்கப்பட்டது. 


தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் முந்தைய நாளை விட கலெக்‌ஷன் அள்ளியதாக sacnilk தளம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3வது நாளில் ஜெயிலர் படம் இந்திய அளவில் ரூ.33 கோடி வசூலைப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலை ஜெயிலர் படம் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் படம் ஈட்டிய வசூலை சேர்த்தால் ரூ.150 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க: AR Rahman: மழையால் இசை கச்சேரி ரத்து.. சோகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.. முதலமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்..!