Rajini Venkat Prabhu : தலைவர் குறி வெச்சிட்டாப்ல...தி கோட் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி

தி கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன

Continues below advertisement

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இரண்டு வாரம் கடந்துள்ள நிலையில் இன்று அக்டோபர் 20 ஆம் தேதி படத்தின் வெற்றி விழாவை படக்குழு சென்னையில் கொண்டாடி வருகிறார்கள். வேட்டையன்  தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்திற்கு பின் அடுத்த படத்திற்காக சில இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டு முதலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது தி கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி

வெங்கட் பிரபு சமீபத்தில் விஜயின் தி கோட் படத்தை இயக்கினார். இந்த படத்தைப் பார்த்த் ரஜினிகாந்த் வெங்கட் பிரபுவுக்கு ஃபோன் செய்து பேசி பாராட்டினார். தி கோட் படத்திற்கு பின் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வெங்கட் பிரபுவிடம் ரஜினி கதை கேட்டிருப்பதாகவும்  தன்னிடம் இருந்த ஒன்லைன் ஒன்றை வெங்கட் பிரபு சொன்னதாகவும் அது ரஜினிக்கு பிடித்து அதை டெவலப் செய்து வரும்படி ரஜினி தெரிவித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. வேட்டையன் படத்தை தயாரித்த லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. நாகர்ஜூனா , உபேந்திரா. சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola