சனாதனம் கொள்கைகள் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நடிகர் விநாயகன் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார். 


சர்ச்சையான உதயநிதியின் கருத்து


தமிழ்நாடு அரசியலில் சனாதனம் கொள்கைகள் குறித்த கருத்துகள் பல்வேறு சூடான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில்  கடந்த  செப்டம்பர் 2 ஆம் தேதி திமுக கழக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 


இதில் சனாதனம் ஒழிப்பு குறித்து உதயநிதி பேசிய கருத்துகள் பாஜக மற்றும் ஹிந்துத்துவா கொள்கைகளை பின்பற்றுபவர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. உச்சக்கட்டமாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா உதயநிதி தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என அறிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி பலரும் சனாதன கொள்கைகள் குறித்த விஷயங்களை மக்களிடையே தெரிவித்து வருகிறார்கள். 


விநாயகன் கொடுத்த விளக்கம்


இப்படியான நிலையில் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் சனாதனம் குறித்த கருத்துகள் சர்ச்சையாகி வரும் நிலையில் தனது முகநூல் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியது. இதனிடையே பேட்டி ஒன்றில், ‘சனாதனம் குறித்து தொலைக்காட்சியில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் யாரும் சனாதனம் என்றால் என்ன என்பது பற்றி சொல்ல மாட்டார்கள். அதேசமயம் சனாதனம் மாறாமல் இருக்கிறது என சொல்கிறவர்கள் ஏன் மாறவில்லை என்றும் தெரிவிக்க வேண்டும்’ என விநாயகன் கூறியுள்ளார். 


சனாதனம் பற்றி தெரிந்தவர்கள் அதைப்பற்றி பேசுவதில்லை. சனாதனம் என்ன என்றே தெரியாமலே டிவியில் விவாதம் நடக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால் விநாயகன் என்று பெயர் வைத்தவரை எல்லாம் ‘விநாயகர்’ என சொல்வது போல் உள்ளது. மேலும் உதயநிதி தன் தலையை சீவ ரூ.10 கோடி என சொல்லப்பட்ட நிலையில்,  10 ரூபாய் சீப்பு போதும் என தெரிவித்தார். ஆனால் நான் அப்படி எதுவும் பதிலடி கொடுக்கவில்லை’ எனவும் விநாயகன் கூறியுள்ளார். 




மேலும் படிக்க: Mark Antony: ‘இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்’ .. மார்க் ஆண்டனி படம் வெற்றி குறித்து வீடியோ வெளியிட்ட விஷால்..!