தலைவர் 171 ஆவது படம் எப்படி இருக்கும் என்று பத்திரிகையாளரின் கேள்விக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிக வசூல் ஈட்டிய படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த 2.0 படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லான், ஷிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி , விநாயகன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இசையமைத்த இந்தப் படம் சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்ததது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் சொகுசுக் கார் பரிசளித்ததுடன். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க நாணையமும் பரிசாக வழங்கியது.
தலைவர் 171
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மீண்டும் ஒரு முறை கூட்டணி அமைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தலைவர் 171 படம் குறித்தான பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்திடம் தலைவர் 171 படம் எப்படியான ஒரு அனுபவமாக இருக்கும் என்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தலைவர் 171 எப்படி ?
தலைவர் 171 படம் எப்படியானதாக இருக்கும் என்று காரில் சென்று கொண்டிருந்த ரஜினியிடம் பத்திரிகையாளர் கேட்க அதற்கு ரஜினிகாந்த் “தற்போது நான் தா.செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறேன். முதலில் அந்தப் படம் தான் வெளியாகும் அதற்கு பின் தான் லோகேஷ் கனகராஜின் படம். டெஃபெனட்லி படம் நல்லா வரும் என்று அவர் கூறினார். ”
தலைவர் 170
தற்சமயம் ரஜினிகாந்த் தனது தலைவர்170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.