சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது” என்று கூறினார்.


திரைத்துறையின் உயரிய விருதான 51-வது தாதாசாகேப் பால்கே விருதினை பெறுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்திய சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு  2020-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை அறிவித்ததில் மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என அவரது பங்களிப்பு சிறப்பானது, " என்று ட்வீட் செய்து இருந்தார் .


சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் "துந்திராஜ் கோவிந்த் பால்கே" அவரின் பெயரிலேயே இந்த விருது வழங்கப்படும். 1969-ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.


இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இந்த விருது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெரும்  12-வது தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த். இதற்கு முன்பு டாக்டர் ராஜ்குமார், அக்கினேனி நாகேஷ்வர் ராவ், கே பாலச்சந்தர் போன்ற கலைஞர்கள் இந்த விருதினைப் பெற்றார்கள் .


ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளை அவர் முடித்துவிட்டார். இறுதிகட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் இருந்து ஏற்கெனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில், நான்காவது பாடலாக  ‘வா சாமி’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண