டிராகன் பட இயக்குநரை பாராட்டிய ரஜினி


பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகியது. அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடி , ரொமான்ஸ் , ஆக்‌ஷன் , மெசேஜ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது டிராகன் திரைப்படம் . 10 நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டியுள்ள இப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. டிராகன் படத்தின் வெற்றி விழாவை நேற்று மார்ச் 5 ஆம் தேதி படக்குழு கொண்டாடியது. இதனைத் தொடர்ந்த் இன்று டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை வீட்டிற்கு அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்






" what a writing Ashwath ! Fantastic fantastic !!" என ரஜினி அவரிடம் கூறியுள்ளார். நல்ல படம் பண்ணனும் , நம்ம படத்த பார்த்து ரஜினி சார் கூப்டு பாராட்டனும், இதெல்லாம் ஒவ்வொரு உதவி இயக்குநரின் கனவு. இன்று என்னுடைய கனவு நினைவேறிய நாள். என அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்