36 வயது கோலி... வயதானலும் தீராத ரெக்கார்ட் தாகம்.. அரையிறுதியில் இந்திய வீரர்களின் சாதனை!
Champions Trophy 2025 : விராட் கோலி ரிக்கி பாண்டிங்கை முந்தி ஒருநாள் வரலாற்றில் இரண்டாவது அதிக கேட்ச் பிடித்த வீரர் ஆனார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதிப் போட்டி வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டதுஇந்த போட்டியில் படைக்கப்பட்ட முக்கிய சாதனைகளின் விவரங்களை கீழே காணலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது . 265 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம், ஷ்ரேயாஸ் ஐயர் (45), கே.எல். ராகுல் (42*), ஹர்திக் பாண்டியா (28) ஆகியோர் இந்தியாவை வெற்றி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.
கோலியின் புதிய சாதனை:
ஒருநாள் போட்டிகளில் (ODIs) அதிக கேட்ச்சுகள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு சாதனையைச் படைத்துள்ளார். இந்த கோலி இரண்டு முக்கியமான கேட்சுகளை எடுத்தார், இதன் மூலம் அவரது கேட்ச் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது, இதன் மூலம் பாண்டிங்கின் சாதனையை கோலி முறியடித்தார். இப்போது அவர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார், 218 கேட்சுகளுடன் முதலிடத்தில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே உள்ளார்.
ஒருநாள் வரலாற்றில் அதிக கேட்சுகள் (டாப் 3):
- மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை): 218 கேட்சுகள்
- விராட் கோலி (இந்தியா): 161 கேட்சுகள்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா): 160 கேட்சுகள்
டாஸில் தொடர் தோல்வி:
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் (ODIs) தொடர்ச்சியாக 11 டாஸ்களை இழந்து தனது துரதிர்ஷ்டவசமான சாதனையைப் படைத்துள்ளார்.ஒட்டுமொத்தமாக இந்திய அணி தொடர்ச்சியாக 14 டாஸ் தோல்விகளை சந்தித்து, கடைசியாக இந்திய அணி 2023 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸில் வெற்றிப்பெற்று இருந்தது.
இதன் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக டாஸ் இழந்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
நாக் அவுட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்:
ஐசிசி சாம்பியன்ஷிப் 2025 அரையிறுதியில் முகமது ஷமி சாதனை படைத்தார் மற்றும் இந்தியாவுக்காக ஐசிசி போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த 3வது பந்து வீச்சாளர் ஆனார்.
- ஜாகீர் கான்: 17 விக்கெட்டுகள் (சராசரி: 28.64)
- சச்சின் டெண்டுல்கர்: 15 விக்கெட்டுகள் (சராசரி: 26.66)
- முகமது ஷமி: 13 விக்கெட்டுகள்* (சராசரி: 19.76)
- ஹர்பஜன் சிங்: 11 விக்கெட்டுகள் (சராசரி: 29.27)
அதிவேகமாக 3000 ரன்கள்:
ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களை வேகமாக எட்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் பெற்றார், 78 இன்னிங்ஸ்சில் ராகுல் இந்த மைல்க்கல்லை எட்டினார். இந்திய பேட்ஸ்மேன்களில், ஷிகர் தவான் (72 இன்னிங்ஸ்) மற்றும் விராட் கோலி (75 இன்னிங்ஸ்) மட்டுமே குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினர்.
1000 ரன்களை கடந்த கோலி:
ஐ.சி.சி நாக் அவுட் போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார், மூன்றாவது இடத்தில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த கோலி, ஒருநாள் போட்டிகளில் ரிக்கி பாண்டிங்கிற்குப் பிறகு அந்த இடத்தில் பேட்டிங் செய்யும்போது 12,000 ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆனார். கடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டங்களில் இலங்கைக்கு எதிராக 96 ரன்களும் (2013), வங்கதேசத்திற்கு எதிராக (2017) 58*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2025) 84 ரன்கள் என மூன்று அரைசதங்களையும் கோலி அடித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியாவின் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஷிகர் தவானை முந்திச் சென்றார்.
இதுமட்டுமில்லாமல் சிங்கில்ஸ் மூலம் அதிக ரன்களை அடித்த வீரர் என்கிற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அவர் 5868 ரன்களை சிங்கில்ஸ் மூலம் படைத்துள்ளார்.
முதல் கேப்டன்:
ஐ.சி.சி போட்டிகளிலும் ஒரு அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் ரோஹித் சர்மா தனது பெயரை வரலாற்றில் பொறித்துள்ளார். அவரது தலைமையில், இந்தியா 2023 இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது. 2024 இல், அவர் அணியை டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு வழிநடத்தினார். இப்போது, 2025 இல், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை மற்றொரு ஐ.சி.சி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.