சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின்(Thalaivar 169) தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.


‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆவதால், இந்த வருடமே அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  ‘தலைவர் 169’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று சிவப்பு நிறத்தில் ஸ்டார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நாளை 11 மணிக்கு  புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது என்று தெரிவித்தது. இது எந்தமாதிரியான அறிவிப்பா இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்காமால், ரஜினி படத்தின் புதிய அறிவிப்புதான் இருக்கும் என்று சமூகவலைதளங்களில் கூறி வந்தனர். தலைவர் 169 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது.


 






அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ‘தலைவர் 169’ படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரத்தக் கறையுடன் தலைகீழாய் தொங்கும் கத்தியுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே. ‘ஜெயிலர்’ தான் தலைப்பு என்று சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த பெயர்தான் என்று தெரிந்துவிட்டது. இந்த போஸ்டர் மற்றும் தலைப்பை பார்த்த ரசிகர்கள், இந்தப் படம் ரஜினிக்கும், நெல்சனுக்கும் நல்ல கம்பேக் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.


 


 






 


'தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண