பேருந்து நடத்துனராக தன் வாழ்க்கையை துவங்கி, தற்போது இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க பல ரசிகர்களும், பிரபலங்களும் போயஸ் கார்டனில் உள்ள இவரின் இல்லத்திற்கு சென்றனர். ஆனால், இவர் ஊரிலேயே இல்லை என்பது, அவரின் ரசிகர்களை வருத்ததிற்கு உள்ளாக்கியது. 


இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி காலையில், ஜெயிலர் படத்தின் அப்டேட் தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் படம் தொடர்பான புதிய தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் படி ஜெயிலர் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 


 


                   


ரஜினி கதாபாத்திரத்தின் பெயர்: 


புதிய போஸ்டரில் நாற்காலி ஒன்றில் அமர்ந்து இருக்கும் ரஜினி, கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அதோடு, ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் முத்துவேல் பாண்டியன் என்று குறிப்பிடபட்டுள்ளது.






ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.






ஜெயிலர் படக்குழுவினர்


அண்ணாத்தா படத்தை தொடர்ந்து, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.


ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. அதைதொடர்ந்து. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராகவும், பல்லவி சிங் ஜெயிலர் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராகவும் பணியற்றி வருகின்றனர்.