சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இலங்கையில் முதல் நாள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


ரஜினிகாந்த் நடிப்பில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி உள்ளதால், இந்த படத்தை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீப காலமாகவே நடிகர் ரஜினிகாந்தின் படங்கள் போதுமான அளவு ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாத நிலையில், இப்படம்  ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 அதேபோல் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் தாறுமாறாக ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக தமன்னா டான்ஸ் ஆடிய காவாலா பாடல் வீடியோ வெளியானதில் இருந்தே, பல பிரபலங்களும் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தனர். இப்படி படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் மீதான ஹைப் அதிகரித்தது. 


மேலும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவேளைக்கு பின்னர்,  நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினிக்கு மகனாக வசந்த் ரவியும், மருமகளாக மிர்ணாவும்  நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், விநாயகன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை தமன்னா இப்படத்திலும் நடிகையாகவே நடித்துள்ளார்.  நட்சத்திர பட்டாளங்ளும் அவர்களின் தேர்வுகளும் கூட இப்படத்திற்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. 


இலங்கையில் முதல் நாள் வசூல்


மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படத்தை காண திரளான ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் நோக்கி படையெடுத்தது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் இலங்கையில் முதல் நாள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இப்படம் இலங்கையில் மட்டும் சுமார் 2 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.


ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் பல்வேறு முந்தைய சாதனைகளை தகர்த்து, புதிய சாதனைகளை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்த நிலையில், மொத்தமாக இந்த படம் முதல் நாளில் எவ்வளவு வசூலித்தது என்பது தொடர்பான தகவல்களைப் பார்க்கலாம்.


முதல் நாள் மொத்த வசூல் 


ஆரம்ப கட்ட தகவல்களின் படி, ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தனது முதல் நாளில் 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராஸ் தொகை ரூ.52 கோடியை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் ரூ. 23 கோடி, கர்நாடகாவில் ரூ.11 கோடி, கேரளாவில் 7 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.7 கோடி, மற்ற மாநிலங்களில் சேர்த்து 3 கோடி ரூபாய் வரை ஜெயிலர் படம் முதல் நாளில் வசூலித்து இருக்கும் என கூறப்படுகிறது.


அமெரிக்காவில் முதல் நாள் வசூல்


நடப்பாண்டில் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தமிழ்படம், கர்நாடகாவில் தமிழ் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிலான ஓபனிங், கேரளாவில் நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடப்பாண்டில் பெரிய ஓபனிங் பெற்ற தமிழ் சினிமா என்ற பல்வேறு பெருமைகளை ஜெயிலர் படம் பெற்றுள்ளது.ஜெயிலர் திரைப்படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் முதல் நாளில் மட்டும் 1.45 மில்லியன் டாலர்கள் வசூலித்ததாக கூறப்படுகிறது.