அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம். 


பணி விவரம்:


அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பணிபுரிவதற்கு தற்காலிகமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 



  • மெக்கானிக்கல் -10

  • சிவில் -08

  • எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் - 10

  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் - 22

  • ஐ.டி. / கம்யூட்டர் சயின்ஸ் - 28

  • மேலாண்மை படிப்புகள்  -04

  • S & H - கணிதம் -02

  • S& H - இயற்பியல்-02

  • S & H - வேதியியல் - 02

  • S & H- ஆங்கிலம் - 02


மொத்தம் பணியிடங்கள் - 90 


கல்வித் தகுதிகள்



  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  B. E / M.E படித்திருக்க வேண்டும். 

  • முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலாண்மை படிப்புகளுக்கு எம்.காம், PGDM/C.A./ICWA/M.Com. உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  • மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • NET / SLET / SET ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:
 
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை?


 நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிகக்ப்படும். 


எப்படி விண்ணப்பிக்கலாம்?


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3QKex9_J7BSiq4ixBbu4mZnuhBOG6HvUHPhYjCoOti1SlMw/viewform - என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதோடு, விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


தொடர்புக்கு..


இ-மெயில் - au.nhhid@gmail.com


தொடர்பு எண் - 044 - 22357953


Director, 
Centre for Entrepreneurship Development,
#302, Platinumn Jubilee Building, 2nd Floor,
AC Tech campus, 
Anna University, 
Chennai 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://annauniv.edu/pdf/Recruitment%20%20engage%20Teaching%20Fellow.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.08.2023


*****


மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் காலியாக உள்ள ஸ்டெனோகிராஃபர் (Stenographer) பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த பணியிடங்களுக்கு சி மற்றும் டி நிலைத்தேர்வில் (Stenographer Grade "C‟ & D‟ Examination, 2022) நடத்தப்பட உள்ளது. 


பணி விவரம்


Stenographer Grade ‘C’ & ‘D’


மொத்த பணியிடங்கள் - 1207 


எப்படி விண்ணபிப்பது?


https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர்,  முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரில் இருந்து பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஸ்டெனோகிராஃபி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.


வயது வரம்பு :



  • "சி" நிலை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.08.2023 -இன் படி, 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • "டி" நிலை பணிக்கு விண்ணப்பிக்க 01.08.2023 அன்று 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
    home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.

  • SSC Stenographer Grade ‘C’ & ‘D’, Apply என்பதை கிளிக் செய்யவும்

  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும் 

  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்

  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


தேர்வு செய்யப்படும் முறை:


கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.  இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறனறிவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 


திறனறிவு தேர்வு:


ஸ்டெனோகிராஃப்ர் "C" நிலை பணிக்கு கணினியில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும், "D" நிலை பதவிக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.


முழு விவரம் அறிய, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice-Steno-2023_02082023.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :23.08.2023


எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.