நடிகர் ரஜினிகாந்தின் 47 ஆண்டுகால திரைத்துறை வாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெறவிருந்த மனிதம் காத்து மகிழ்வோம் விழா நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மார்ச் 26ஆம் தேதி இந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மனிதம் காத்து மகிழ்வோம் எனும் பெயரில் இந்த விழா, ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் முன்னிலையில் இந்த விழா நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த விழா தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் பாராட்டு விழாவில் திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், இயக்குநர் எஸ்.பி முத்துராமன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இயக்குநர்கள் பி, வாசு, அதிமுக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், நட்டி நட்ராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது 73 வயதாகிறது. தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமா முழுவதும் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடித் தீர்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்குகளும், மேனரிசங்களும் உலகம் முழுவதும் ரசித்துக் கொண்ப்படுகிறது.
தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தை அதிரச் செய்யும் வகையில் பல அதிரடி வசனங்களை பேசி ஆச்சரியப்படுத்தியுள்ள ரஜினி, தொடக்கத்தில் அரசியலுக்கு நோ சொல்லி எண்ட் கார்ட் போட்டார்.
ஆனால் நாளடைவில் “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” என பேச தனது ரசிகர்களையும் குழப்பி வந்தார்.
அரசியலுக்கு வருவது உறுதி எனக் கடந்த 2017ஆம் ஆண்டு தெரிவித்து தொடர்ந்து இழுத்தடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு அரசியலில் புரட்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் ஆனால் முதலமைச்சர் வேட்பாளாராக இருக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பில் ஏற்பட்ட உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தபின் கட்சி தொடங்க முடியவில்லை என்னை மன்னியுங்கள் என 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டு தன் அரசியல் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் படிக்க: Oscar Movies OTT Steaming : ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய திரைப்படங்கள்... எந்தெந்த ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்... விரிவான தகவல் இதோ