காரைக்காலில் போலி நகையை நூதனமாக விற்க முயற்சி ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

 

காரைக்கால் மாவட்டம் பெரமசாமி பிள்ளை வீதியில் நகை கடை நடத்தி வரும் கைலாஷ் என்பவரது கடைக்கு தனது 12 பவுன் தங்க நகையை விற்க வேண்டும் என கூறி காரைக்கால் சின்னகன்னு செட்டி தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவர் வந்துள்ளார். செயினை சோதித்து பார்த்ததில் 12 பவுன் 916 எனவும் தெரிந்துள்ளது. இருந்த போதிலும் செயினின் மீது சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் கைலாஷ் தனது சித்தப்பா மகனை அழைத்து சோதித்து பார்த்து சந்தேகமடைந்து செயினை வெட்டி பார்த்த போது உள்ளே செம்பு கம்பி இருந்துள்ளது. உடனடியாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பரசுராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நகை கொடுத்து அனுப்பியதாக திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ரிபாத் காமில் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் காரைக்காலில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புவனேஸ்வரி மற்றும் அவரது ஆண் நண்பர் புதுச்சேரி காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோம் ஆகியோர் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.



 

இது மட்டுமில்லாமல் காரைக்கால் நகரப் பகுதியில் இயங்கி வரும் புதுவை பாரதியார் கிராம வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் இதே போல போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் பார்த்துள்ளதாக இந்த கும்பல் மீது மேலும் ஒரு வழக்கு நகர காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. புதுவை பாரதியார் கிராம வங்கியின் மேலாளர் அருண் கொடுத்த புகாரின் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



 

மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான புவனேஸ்வரி தப்பிச்சென்று தலை மறைவாக உள்ளதால் தனிப்படை அமைத்து புவனேஸ்வரியை காரைக்கால் போலீசார் தேடி வருகின்றனர். இவ் வழக்கில் அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டிருப்பதால் காரைக்கால் போலீசார் திணறி வருகின்றனர். புதுச்சேரியில் தொடங்கிய இந்த வழக்கு தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நிலை உள்ளதாக காவல்துறையில் வட்டாரங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.