Rajinikanth: காந்தாரா திரைப்படம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து படம் வெளியிடப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரின் அபாரமான நடிப்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை இணையத்திலும் நேரடியாகவும் சென்று வாழ்த்தி வருகிறார்கள். "காந்தாரா" படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தமிழில் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் காந்தாரா படம் குறித்தும் நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, "தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" இதனை காந்தாரா திரைப்படத்தில் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்து என் உடல் சிலிர்த்தது என தெரிவித்தார். மேலும், இந்த படத்தின் இயக்குநர், நடிகருமான ரஷிப் ஷெட்டியின் பணி சிறப்பாக இருந்தது. இந்திய சினிமாவில் ஒரு மாபெரும் படத்தை கொடுத்ததற்காக காந்தாராவின் இயக்குநர் மற்றும் நடிகருமான ரிஷப் ஷெட்டி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Vairamuthu : பிள்ளைகளுக்கு தமிழ் பேச, எழுத கத்துக்கொடுங்க.. வேண்டுகோள் வைத்த வைரமுத்து
Ram Setu : முதல் நாளே 15 கோடி வசூல்... பாலிவுட் ஓப்பனிங் சாதனையில் ‛ராம் சேது’