தமிழ் சினிமாவின் ஸ்டார் மேக்கர் என அழைக்கப்படுபவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள். இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும் . பன்முக கலைஞரான பஞ்சு அருணாச்சலம் அவர்கள் ரஜினிகாந்த்தின் ஆரம்ப நாட்களில் அவரின் சிறப்பான படங்களுக்கு ஆலோசகராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வீரா திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம்தான். அந்த சமயத்தில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவத்தை நடிகரும் , பஞ்சு அருணாச்சலத்தின் மகனுமான சுப்பு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில்“ அப்பா ஒருநாள் .ரஜினி சார் வீட்டுக்கு போய் அவரை அழச்சுட்டு வானு சொன்னார். நான் போனேன். அவர் தயாரா இருந்தாரு. அப்பறம் வீட்டுக்கு வந்துதான் வீரா திரைப்படம் ரஜினி சார் பண்ணுறார்னு உறுதியானது. அதன் பிறகு அடுத்த நாள் வுட்லாண்ஸ் ஹோட்டல்ல பத்திரிக்கையாளர் சந்திப்பு வச்சு அறிவிப்பு வெளியிட்டாங்க. அந்த படம் ஒரு நல்ல பயணம். வீரா படம் தெலுங்கு படத்தின் ரீமேக். அதுல மோகன் பாபு சார் நடித்திருந்தார். அந்த படத்தை ரஜினிச்சாருக்கு ஏற்ற மாதிரியாக மாற்றினார். முதல்ல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சாருக்கு கதையே பிடிக்கல அப்பறம் அப்பா (பஞ்சு அருணாச்சலம் ) மாற்றி சொன்னதும் அவர் ஓக்கே சொன்னாரு. முன்னம் செய்த தவம் , உன்னை என் அருகில் சேர்த்தது மற்றும் கொஞ்சி கொஞ்சி என இரண்டு பாடல்களும் ரெடியாயிடுச்சு. இரண்டுமே நல்ல பீட்டில் அருமையான பாடல் . ஆனால் இந்த இரண்டு பாடல்களும் ரஜினி சாருக்கு பிடிக்கல. கொஞ்சி கொஞ்சி பாடல் படத்தில் வரும் சூழல் ரஜினி சாருக்கு பிடிக்கல. தெலுங்குல நாகேஷ் சாருக்கும் , மோகன் பாபு சாருக்கும் கர்நாடக சங்கீத மோதல் போல அந்த பாடல் உருவாகியிருக்கும். அதுதான் ரஜினி சாருக்கு பயங்கரமா ஃபிக்ஸ் ஆயிடுச்சு. அப்படியா பவர்ஃபுல்லா இருந்தா பாடல் , இங்கு கொஞ்சி கொஞ்சி என மெலடியாக போவதில்லை விருப்பமில்லை.
உடனே அப்பாக்கிட்ட வந்து ரஜினி சார் சொன்னப்போ , நீ பண்ணு ரஜினி ,, நல்லா இல்லைனா வேற போட்டுக்கலாம் என்றார் வழக்கம் போல. அதன் பிறகு அப்பா இரண்டு பாட்டுல ஒன்றை ரஜினி சாருக்காக மாத்திடலாம் என ’ முன்னம் செய்த தவம் , உன்னை என் அருகில் சேர்த்தது ‘ பாடலை மாற்றலாம் என இளையராஜா சாரிடம் சொன்னார் . உடனே இளையராஜா சார் ஏன் நல்லாத்தானே இருக்கு என்றார். ரஜினி சாருக்கு ஹெவி பீட்ல வேணுமாம் என்றது. மலைக்கோவில் வாசலில் பாட்டை இசையமைத்து கொடுத்தார் இளையராஜா. இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட். குறிப்பாக கொஞ்சி கொஞ்சி பாடல் கூடுதல் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ரஜினி சார் என்னிடம் பேசும் பொழுது சொன்னார் , சில விசயங்கள் பஞ்சு சாரிடம் வாதம் செய்வதே தவறு சுப்பு . அவர் என்ன சொல்கிறாரோ அது சரியாகத்தான் இருக்கும் என்றார் “ என தனது இளம் வயதில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் சுப்பு.