சிறுத்தை பட இயக்குநர் சிவா ரஜினியை இயக்கியிருக்கும் படம் அண்ணாத்த(Annaatthe). கிராமத்து கதைகளையும்,  குடும்பத்து உறவுகளையும் வைத்து வீரம், விஸ்வாசம் என அஜித்திற்கு அவர் ஹிட் கொடுத்ததால் ரஜினியை வைத்து எடுத்திருக்கும் அண்ணாத்த படமும்  அந்த வரிசையில் இணையும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


படமும் தீபாவளியையொட்டி நவம்பர் நான்காம் தேதி வெளியானது. நீண்ட வருடங்கள் கழித்து ரஜினி கிராமத்து கதையில் நடித்திருப்பதால் அண்ணாத்த படத்துக்கு ரஜினி ரசிகர்கள்  கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர்.


 






ஆனால், படம் எதிர்பார்த்தபடி இல்லை என ரஜினி ரசிகர்களே நொந்துகொண்டனர். இருப்பினும், அண்ணாத்த படம் வெளியான முதல் நாளில் உலகளவில் மொத்தம் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது எனவும் தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் தகவல் வெளியானது . அதுமட்டுமின்றி படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 112 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டது.


 






இந்நிலையில் அண்ணாத்த படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியிருக்கும் சூழலில் அப்படம் ரூ 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் வசூல் ஆவதே குதிரை கொம்பாக இருக்கும் சமயத்தில் அண்ணாத்த படத்தின் இந்த வசூல் வேட்டை கோலிவுட்டை பிரமிக்க வைத்துள்ளது.




அதுமட்டுமின்றி சென்னையில் மழை கொட்டிவரும் நிலையிலும் மூன்றாவது நாளான நேற்று குடும்பம் குடும்பமாக அண்ணாத்த படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் படையெடுத்தனர். இதன் மூலம் கோலிவுட்டில் யார் வந்தாலும் சென்றாலும் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி உணர்த்தியிருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண