சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து இயக்குநர் சிவா இயக்கியிருக்கும் படம் அண்ணாத்த. தீபாவளியையொட்டி நேற்று வெளியான இப்படத்தை ரஜினி ரசிகர்கள் பண்டிகையைப் போல் கொண்டாடிவருகின்றனர்.


அதேசமயம் அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக கடுமையான எதிர்வினைகளை சந்தித்துவருகிறது.  படத்தின் கதையில் புதிதாக எதுவுமில்லை. சிவா தனது முந்தைய படமான விஸ்வாசத்திலிருந்து கொஞ்சம், திருப்பாச்சி திரைப்படத்திலிருந்து கொஞ்சம் எடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார். திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. 


இது மிக மிக பழமையான கதை. காமெடி என்ற பெயரில் எதையோ செய்துவைத்திருக்கிறார்கள். ரஜினி கொடுத்த வாய்ப்பை முருகதாஸைத் தொடர்ந்து சிவாவும் வீணடித்துவிட்டார் என தீவிரமாக விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இதனால் இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு கடும் அப்செட் என கோலிவுட்டில் பேச்சு கேட்கிறது. அதேசமயம் நெகட்டிவ் விமர்சனங்கள் எதுவும் படத்தின் வசூலை பாதிக்காது என்றும் சிலர் கூறிவந்தனர். 


அண்ணாத்த படத்துடன் விஷால் - ஆர்யா இணைந்து நடித்த எனிமி திரைப்படமும் வெளியானது. ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அண்ணாத்த படத்தைவிட  பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன.


 






இந்நிலையில் தீபாவளியன்று வெளியான படங்களில் அண்ணாத்த படம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 2021ஆம் ஆண்டில் நவம்பவர் நான்காம் தேதிவரை வெளியான இந்திய படங்களிலேயே அண்ணாத்த படம்தான் முதல் நாளில் அதிகம் வசூலித்துள்ளது எனவும்,  முதல் நாள் அப்படம்  முதல் நாளில்மொத்தம் 70 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Annaatthe Review: ரஜினியின் வெறித்தனமான எனர்ஜி ப்ளஸ்.. வில்லன் யாரு ஜெகபதி பாபுவா? சிவாவா?