ஜெயிலர் பட ஆடியோ வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கதை தொடர்பாக, சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் நடத்திய கருத்துக்கணிப்பு ரஜினி, விஜய் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 


சன்பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் 169வது படமான “ஜெயிலர்” படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். 


ரஜினி சொன்ன குட்டிக்கதை


இதனிடையே ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தன் வாழ்க்கை அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கழுகு - காகம் தொடர்பான கதையை கூறினார். அதாவது, “காகம் எப்பவும் கழுகை சீண்டி கொண்டே இருக்கும். ஆனால் கழுகு எப்பவும் அமைதியாக இருக்கும்.


கழுகு பறக்கும் போது பார்த்து காகம் உயரமா பறக்க நினைக்கும். ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் காகத்தால் மறக்க முடியாது. நான் காகம்,கழுகுனு சொன்ன உடனே ரஜினி இவரைத்தான் சொல்றாருன்னு சோசியல் மீடியால சொல்லுவாங்க. அதாவது குறைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது இரண்டும் இல்லாத ஊரும் இல்லை என தெரிவித்திருந்தார். வாழ்க்கையில நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறிவிடலாம் என்ற ரீதியில் ரஜினி இப்படி ஒரு கதையை சொன்னார்.


கருத்துக்கணிப்பு 


ஆனால் அவர் சொன்னது போலவே, காகம் என யாரை சொல்கிறார் என சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பி வருகின்றனர். பலரும் நடிகர் விஜய்யின் பெயரை வெளிப்படையாகவே கூறினர். இதற்கு விஜய் ரசிகர்கள் சார்பில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது. சிலர் ரஜினி தன்னை விமர்சித்த திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறனை தான் இப்படி சொல்கிறார் என தெரிவித்தனர். 






இப்படியான நிலையில்,  ப்ளூ சட்டை மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில் ”காகம் என்று முரட்டுக்காளை கூறியது யாரை?” என கேள்வி எழுப்பி அதில், தன் பெயரையும் நடிகர் விஜய் பெயரையும் குறிப்பிட்டு கருத்து கணிப்பு நடத்தினார். இதில் அதிக ஓட்டு விஜய்க்கு விழுந்திருந்தது. இதனால் கடுப்பான விஜய், ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.