வேட்டையன்


ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , ரானா டகுபதி , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வேட்டையன் படத்தைப் பார்வையிட்ட ரசிகர்கள் இப்படத்திற்கு எக்ஸ் தளத்தில் என்ன விமர்சனங்களை சொல்லி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்


 


வெட்டையன் முதல் பாகம் எப்படி ?


வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளதாகவும். ரஜினியின் மாஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இருபது நிமிடத்திற்குப் பின் படம் விறுவிறுப்பான ஒரு திரைக்கதையை நோக்கி நகர்கிறது. அனிருத்தின் பின்னணி இசை பெரிய பலமாக இருக்கிறது. துஷாரா மற்றும் ஃபகத் ஃபாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  






குறிப்பாக ஃபகத் ஃபாசில் மற்றும் ரஜினி இடையிலான காட்சிகள் செம காமெடியாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ரஜினி இன்ட்ரோ எப்படி ?


ரஜினி  இன்ட்ரோ என்பது எப்போதும் ஸ்பெஷல். அந்த வகையில் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஒரு செம மாஸான இன்ட்ரோ காட்சி வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். தீவிரமாக அரசியல் பேசும் இயக்குநர் ஞானவேல் ரஜினிக்கு ஏற்ற மாஸ் காட்சிகளை எப்படி உருவாக்கப் போகிறார் என்கிற ரசிகர்களின் பயம் போகும் வகையில் ஒவ்வொரு மாஸ் காட்சியையும் இயக்குநர் செதுக்கியிருக்கிறார் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். 






வேட்டையன் இரண்டாம் பாகம் விமர்சனம்


மாஸ் , விறுவிறுப்பு என நகரும் முதல் பாகம் என்றால் இரண்டாம் பாகம் கதையுடன் ஒன்றி இருக்கிறது. தான் சொல்ல வந்த மெசேஜை முடிந்த அளவிற்கு டல் அடிக்காத   திரைக்கதையில் இயக்குநர் ஞானவேல் சொல்லி இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.






ஆக மொத்தம் கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு எந்த விதத்திலும் குறையாத பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக வேட்டையன் அமையும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.