மூன்று தலைமுறைகளாக சினிமாவை தயாரித்து வரும் நிறுவனம்தான் பிரபல ஏ.வி.எம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் தயாரிக்க , ஷங்கர்  இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி. இந்த படம் உருவான விதம் குறித்தும் , ஏன் தற்போது ஏ.வி.எம் நிறுவனம் படங்கள் தயாரிப்பதில்லை என்பது குறித்தும் சில தெரியாத தகவல்களை ஏ.வி.எம் சரவணன் பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ” ஒருநாள் நாள் ரஜினி கால் பண்ணாரு. நானும் ஷங்கரும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்துல இருக்கிறோம். நீங்களும் குகன் சாரும் வர முடியுமானு கேட்டாரு.  சரி படம் கிளிக் ஆகிடுச்சு போல...செக் புக்கை எடுத்துட்டு வா..என்றேன்.


இல்லைப்பா நாம பிரிண்ட் இல்லாம அப்படி குடுக்குறது இல்லையே என்றார் குகன். 1001-ஐ பணமா வச்சு கொடுத்துட்டு வரலாம். அதுக்கப்பறம் கொடுத்துக்கலாம் என்றேன். 1001 அசிங்கமா இருக்குமே என்றார் குகன். இல்லைப்பா அது ஒரு முன்பணமா கொடுக்கலாம் என்றேன்.




என்கிட்ட 1000 ரூபாய் கசங்கி இருந்தது.  1 ரூபாய் நல்ல நோட்டாக இருந்தது.  குகன்கிட்ட 1000 ரூபாய் வாங்கி 1001 ஆக கொடுத்தேன். மண்டபத்திற்கு போனதும்  ரஜினி இதுபோல கதை ஓக்கே சார் பண்ணிடலாம்னு சொன்னதும் நான் 1001-ஐ  டோக்கன் அட்வான்ஸா வச்சுக்கங்கன்னு கொடுத்தேன். ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி  வாங்கிக்கிட்டாரு. அதே போல ஷங்கருக்கும் கொடுத்தோம். அதன் பிறகு அவங்க மேனேஜர்ஸ் வந்து சம்பளம் சொன்னாங்க. நான் மோட் ஆஃப் பேமண்ட் எவ்வளவுனு சொல்லிட்டா நல்லா இருக்கும் , நான் பேங்க்லதான் பணம் வாங்கணும்னு சொன்னேன். உடனே ரஜினி சார்கிட்ட பேசினாங்க. அவர் சொன்னார் அதான் அட்வான்ஸ் கொடுத்துட்டீங்களே என்றார். சார் அது டோக்கன் அட்வான்ஸ் , முழுமையா சொல்லிட்டா நல்லாயிருக்கும்னு சொன்னேன்.. அவர் பரவாயில்லை சார் , நான் படத்தை 1001-லயே நடிக்கிறேன் . பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு. அந்த படத்தை 1001 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் ரஜினி நடித்தார். அதன் பிறகு கதை கேட்க வேண்டுமென ஷங்கரிடம் கூறினோம். அவர் நான் கதையெல்லாம் சொல்ல முடியாதுன்னு சொன்னார்.


ஏ.வி.எம் எப்போதும் கதை கேட்காமல் படம் பண்ணாது என்றவுடன் , நான் நேரடியாக வந்து கதை சொல்ல முடியாது, கேசட்டில் அனுப்புகிறேன் என அனுப்பினார். அதன் பிறகு ஓக்கெ செய்தோம் . தற்போது இருக்கும் சினிமாவில் படம் செய்வதற்கான தொகை அதிகமாகிவிட்டது. நான் 2.5 கோடி ரூபாயில் சின்ன பட்ஜெட் படமாக பண்ணலாம் என கையில் எடுத்தேன் . ஆனால் 4 கோடிக்கும் மேலாக செலவானது. அதனால்தான் இப்போதைக்கு படம் வேண்டாம் , சிறிது காலத்திற்கு பிறகு தயாரிக்கலாம் என ஏ.வி.எம் படங்களை தயாரிப்பதில்லை “ என சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் ஏ.வி.எம் சரவணன்.