நல்ல நேரம்:


காலை- 10:30 மணி முதல் 11:30 மணி வரை


கெளரி நல்ல நேரம்









மாலை - 6:30 மணி முதல் 7:30 மணி வரை





ராகுகாலம்: 




பகல்-  1:30 மணி முதல் 3:00 மணி வரை


குளிகை:


பகல் 9 மணி முதல் 10:30 மணி வரை 


எம கண்டம்:


காலை 6  மணி முதல் 7:30 மணி வரை


சூலம், பரிகாரம்:


தெற்கு , தைலம்


சந்திராஷ்டமம்:


புனர்பூசம் , பூசம்


இன்றைய ராசிபலன்கள்:


மேஷம்:


நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கை கொடுப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உதவ முன்வருவார்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்தவை நிறைவேறும். தொழில் முன்னேற்றத்திற்கான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கலகலப்பான பேச்சு மூலம் பலரையும் கவருவீர்கள். 


ரிஷபம்:


திட்டமிட்டு ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்கள் மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் உடன் இருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுறுசுறுப்பான செயல்பாடு மிக முக்கியம். 


மிதுனம்:


தந்தை வழியில் பணவரவு இருக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்த மனகசப்பு நீங்கும். கல்வியில் மாணவர்கள் நலன் மேலோங்கும். உடல் நலன் பாதிப்பு ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் பெரிய பயனளிக்கும். மனதில் ஒருவிதமான குழுப்பம் ஏற்பட்டு நீங்கும். 


கடகம்: 


வீண் வாக்குவாதங்கள், கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. முதலீடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுபச்செலவுகள் வந்து போகும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். நிதானமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.


சிம்மம்:


உயர் அதிகாரிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் பலரின் நெருக்கம் கிடைக்கும். வியாபாரத்திற்கு பெரிதும் அது உதவும். அரசு தொடர்பான சில உதவிகள் சாதகமாக கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் நிறைந்து காணப்படும். 


கன்னி:


பெற்ற பிள்ளைகளால் உங்களுக்கு நன்மை நேரிடும். பயணங்களின் மூலம் திடீர் மாற்றங்களை சந்திக்க நேரிடும். வியாபார போட்டிள் படிப்படியாக குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 


துலாம்: 


உயர் அதிகாரிகள், மற்றும் முக்கியஸ்தர்களின் சந்திப்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகளில் சாதகமான சூழல் ஏற்படும். பண விவகாரத்தில் சாதகமாக சூழல் நிலவும். எதிர்பாராத உதவிகளால் மாற்றம் உண்டாகும். 


விருச்சிகம்: 


நண்பர்கள் பற்றி தேவையில்லாத கருத்துக்களை தவிர்க்கவும். மனதில் இருந்த கவலை நீங்கி , தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற பணிகளை பூர்த்தி செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். 


தனுசு:


திறமையுடன் பணியை விரைந்து செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு உரிய மரியாதை கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உண்மையானவர்களை அடையாளம் காண்பீர்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புண்டு.


மகரம்: 


புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதிவிகளில் அமர்ந்திருப்போர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தாய் வழி, தந்தை வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு. லாபகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும். 


கும்பம்: 


உறவினர் வழி சுபச் செய்திகள் வந்தடையும். கால்நடை சார்ந்த தொழிலில் வளம் கிடைக்கும். மாணவர்கள் மாற்றத்தை சந்திப்பார்கள். புதிய வாகனம், வீடு, சொத்து வாங்க சிறந்த நாள் இன்று. புதிய சிந்தனைகள் வந்து போகும். 


மீனம்:


தன்னம்பிக்கை மனதில்  மேலோங்கும். நீண்ட நாள் கடன் தொல்லை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். புதுவித பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். விளையாட்டில் ஆர்வம் மேலோங்கும். பலரின் அன்பை பெறும் நாள் இன்று. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண