சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டி. இமான் இசையமைத்திருந்த இப்படம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியானது. நீண்ட வருடங்கள் கழித்து ரஜினி கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்ததால் ரசிகர்களிடம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்தது.
ஆனால் படத்தை கண்ட ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். இருப்பினும் படம் வசூல் ரீதியாக வென்றுவிட்டதாக பலர் கூறுகின்றனர். ரஜினியின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்க வேண்டுமென ரஜினியின் மகள் ஐஸ்வர்யா கூறியிருந்தார். இதனையடுத்து சிவா வீட்டுக்கு சென்ற ரஜினி அவருடன் சில மணிநேரங்கள் பேசிவிட்டு அண்ணாத்த வெற்றியடைந்ததற்காக அவருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த ஹூட் செயலியில் அண்ணாத்த படம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “எதிர் விமர்சனம், மழை போன்றவைகளை கடந்து அண்ணாத்த திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. மழை இல்லையென்றால், படம் இன்னும் பெரிய வெற்றியடைந்திருக்கும்.
அண்ணாத்த வெற்றிக்கு படத்தின் இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஆகியோரின் நல்ல மனமே காரணம். பல இடர்களை தாண்டி அண்ணாத்த படப்பிடிப்பை முடித்தோம். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்” என கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajinikanth meets shiva |இயக்குநர் சிவாவிற்கு தங்க சங்கிலி கிஃப்ட் செய்த ரஜினிகாந்த்! - காரணம் இதுதானாம்!
பள்ளிகளுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ்
வேலூரில் இன்று பிற்பகல் 3.14 மணிக்கு லேசான நில அதிர்வு..!
அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை...! - தி.மு.க. எம்.பி ஆர்.எஸ்.பாரதி..