தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய சினிமாவில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்ற படங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ட்ரிம்மிங் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'பாபா' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் அஜித் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இரு படங்கள் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


ட்ரிம் செய்யப்படும் கபாலி :


பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கபாலி'. ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது மேலும் அவர் மிகவும் அனுபவித்து நடித்த படம் என பல ரசிகர்களும் பாராட்டினாலும் பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கு அப்படம் திருப்திகரமாக இல்லை. திரைக்கதை கொஞ்சம் மாற்றப்பட்டு இருக்கலாம், கிளைமாக்ஸ் காட்சிகள் இப்படி இருந்து இருக்கலாம் என பல விமர்சனங்கள் எழுந்தன. பா. ரஞ்சித் விருப்பபடியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என ரஜினி தெரிவிக்கவே அது குறித்து எதுவும் பேசவில்லை என சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் தயாரிப்பாளர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.  



 


அந்த வகையில் தற்போது 'கபாலி' படத்தை சற்று ரீ எடிட் செய்து கிளைமாக்ஸ் காட்சியை சற்று மாற்றி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்ற புதிய தகவலை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ். தாணு. இந்த புதிய தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.  


ரீ ரிலீஸ் செய்யப்படும் அமராவதி :


நடிகர் அஜித் தனது 52வது பிறந்தநாளை மே 1-ஆம் தேதி கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 1993-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் நடிகர் அஜித் அறிமுகமான 'அமராவதி' திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். சோழா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்த இப்படத்தில் நடிகை சங்கவி அஜித் ஜோடியாக நடித்திருந்தார். 



பர்த்டே ட்ரீட் :


அஜித் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் பிறந்தநாள் அன்று அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப புதிப்பிக்கப்பட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் பொன்னுரங்கம். இந்த தகவல் தல ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக உள்ளது.