Rajinikanth: அட.. ஹாலிவுட் கார்ட்டூன் தொடரில் 80ஸ் ரஜினிகாந்த் படக்காட்சி: ஷாக்கில் ரசிகர்கள்!

Rajinikanth: அமெரிக்க சிட்காம் தொடர் ஒன்றில் ரஜினி படத்தின் காட்சி இடம்பெற்றிருக்கு வீடியோ வைரலாகி வருகிறது.

Continues below advertisement

அமெரிக்கன் டேட் என்கிற கார்ட்டூன் தொடரின் ரஜினியின் ‘அதிசயப்பிறவி’ படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது.

Continues below advertisement

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கம் செலுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். நடப்பது, முடியைக் கோதுவது, தூக்கிப் போட்டு சிகரெட்டை பிடிப்பது, உள்ளே ஒரு டீ ஷர்ட் அணிந்து வெளியே சட்டை பட்டனை திறந்து விடுவது, என ரஜினி எதை செய்தாலும் அதை அந்தக் காலத்தின் வெகுஜனம் அப்படியே பின்பற்றும். எந்திரன் படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் எல்லாம் சிட்டி ரோபோட் மாதிரியே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்ததை நாம் பார்த்திருப்போம். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வரை ரஜினியின் ஸ்டைலை ரசித்து வருகிறார்கள். 

ஹாலிவுட் சிட்காமில் ரஜினி படக்காட்சி

ஹாலிவுட்டில் பொழுதை போக்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சிட்காம் தொடர்கள் அதிகம். ஃப்ரண்ட்ஸ், தி ஆபிஸ், ஹவ் ஐ மெட் யுவர் மதர் போன்ற தொடர்கள் இன்றுவரை தொடர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகின்றன. இதே வகையிலான சிட்காம் தொடர்கள் அனிமேஷனிலும் வெளியாகின. தற்போது இந்தத் தொடர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் பெருகியுள்ளார்கள். இதன் விளைவாக இந்த தொடர்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்படுகின்றன. அப்படி தமிழில் வெளியாகி வரும் ஒரு தொடர்தான் “அமெரிக்கன் டேட்”.

இந்தத் தொடரில் வரும் ஒரு காட்சியில் ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்தின் ஒரு காட்சி அப்படியே கார்ட்டூன் வடிவில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் மேலும் இந்த மாதிரி இன்னும் எத்தனை காட்சிகள் இந்த தொடர்களில் இருக்கும் என்கிற தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளார்கள்.

வேட்டையன்

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கேரளா, திருநெல்வேலி , தூத்துக்குடி, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திரா மாநிலத்தில் கடப்பாவில் நடைபெற்று வருகிறது. 


மேலும் படிக்க : Boss Engira Bhaskaran : ஒரே ஒரு ஃப்ரண்ட வெச்சுக்கிட்டு, நான் படுற அவஸ்தை இருக்கே.. ரீரிலிஸ் ஆகிறது பாஸ் என்கிற பாஸ்கரன்

Zanai Bhosle: ஹீரோயினாக அறிமுகமாகும் பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி: எந்தப் படம் தெரியுமா?

Continues below advertisement
Sponsored Links by Taboola