14 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தை, இப்போது மீண்டும் சென்னை கமலா திரையரங்கம் வெளியிடுகிறது


அடுத்த ரீரிலீஸ் என்ன ?


 2024 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தமிழில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவிலான வெற்றிபெறவில்லை. இதனால் திரையரங்கத்தின் லாபமும் கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாக பிரேமலு, ப்ரமயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட தமிழ் படங்களை தூக்கிவிட்டு இந்தப் படங்களுக்கான காட்சிகளை அதிகரித்தன திரையரங்கங்கள். பெரிதாக படங்கள் வெற்றிபெறாத காரணம் ஒரு பக்கம் என்றால் பழைய படங்களை மீண்டும் திரையரங்கத்தில் பார்க்கும் ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. இதனால் திரையரங்குகள் பழைய படங்களை மீண்டும் திரையிட்டு வருகின்றன. இந்த படங்களில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். விஜய் , அஜித் , ரஜினி ,. கமல் என எல்லா ஸ்டார்களின் படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன. அந்த வரிசையில் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன்


பாஸ் என்கிற பாஸ்கரன்






கடந்த 2010 ஆம் ஆண்டு எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்படத்தின் கமர்ஷியல் வெற்றி ஆர்யாவின் கரியரில் ஒரு திருப்புமுனையாக இருந்த படம் என்றே சொல்லலாம். சந்தானம் , நயன்தாரா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஆர்யா சந்தானத்தின் கெமிஸ்ட்ரிக்காகவே ஓடிய இந்தப் படத்தின் வசனங்கள் இன்று வரை ரசித்து பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்தப் படத்தை சென்னை கமலா திரையரங்கம் தற்போது வெளியிட இருக்கிறது. விரைவில் இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்க இருக்கின்றன.


10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி


'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர்  ஆர்யாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி படம் ஒன்றில் மிக விரைவில் நடிக்க இருக்கிறோம் என சர்ப்ரைஸ் தகவல் கொடுத்தார். இந்தப் படத்திற்கு கவுண்டமணியின் டயலாக் ஒன்றை டைட்டிலை வைத்துள்ளதாகவும் சந்தானம் தெரிவித்துள்ளார். ஆர்யா மற்றும் சந்தானம் கடைசியாக ”வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க” படத்தில் இணைந்து நடித்தார்கள் . தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்யாவின் நட்பிற்காக சந்தானம் மீண்டும் ஒருமுறை காமெடியனாக நடிக்க இருக்கிறார்.