Lal Salaam Release :  பொங்கலுக்கு ரிலீசாகும் லால் சலாம் படத்தின் தமிழகத்தில் வெளியீடு உரிமத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இவர் மட்டும் இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் விரர் கபில்தேவும் நடித்துள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.


திருவண்ணாமலையில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில், கிர்க்கெட்டை மையப்படுத்தி லால் சலாம் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் குறைந்தபட்சம் 35 நிமிடங்களே வருவதற்கு ரூ.40 கோடியை சம்பளமாக ரஜினி பெற்றதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் முடிந்த நிலையில், படம் ரிலீஸ்க்கு தாயாராகியுள்ளது. 






இந்த நிலையில் லால் சலாம் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பொங்கலுக்கு ரிலீசாகும் லால் சலாம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் நடித்த 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். 



மேலும் படிக்க: ABP Southern Rising Summit 2023 LIVE: ”ஊடகங்களின் ஆசிரியராக இருப்பது பிரதமர் மோடிதான்" - ஜான் பிரிட்டாஸ் எம்.பி


PTR Palanivel Thiagarajan: மதங்களை ஆயுதமாக வைத்து, மக்களை பிரிக்க நினைத்தால், அது தென்னிந்தியாவில் பலிக்காது - பி.டி.ஆர்